இலங்கை விமானத் தாக்குதலில் 5 பேர் பலி
கொழும்பு:விடுதலைப் புலிகள் வசம் உள்ள தமிழர் பகுதிகளில் இன்று 2வது நாளாக இலங்கை விமானப் படை நடத்தியதாக்குதலில் 5 தமிழர்கள் பலியானார்கள்.
ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையேமீண்டும் தீவிரத் தாக்குதல் தொடங்கியுள்ளது.
வடக்கிலும், கிழக்கிலும் இரு தரப்பினரும் ஆங்காங்கே மோதி வருகின்றனர். இன்று வலிமை மிக்க புலிகளின்பகுதியான கிளிநொச்சி அருகே ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
கிளிநொச்சியில் புலிகளின் அரசியல் பிரிவு அலுலகங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 3 கிலோமீட்டர்தொலைவில், ஒரு மருத்துவமனை அருகே விமானப் படை சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியது. இதில்அங்கிருந்த ஒரு வீடு இடிந்து தரைமட்டமானது.
அந்த வீட்டில் இருந்த 5 பேரும் அங்கேயே உயிரிழந்தனர்.
இந்த குண்டுவீச்சு மற்றும் உயிரிழப்பை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுதி செய்துள்ளது. 2002ம்ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் கோட்டையாக கருதப்படும் கிளிநொச்சிக்குள் ராணுவம் முதல் முறையாகதாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து புலிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில்,சிங்களப் படையினரின் தாக்குதலில் ஒரு வீடு இடிந்துள்ளது. அதில் இருந்த ஒரு தாய், ஒரு தந்தை, அவர்களின்இரண்டுகுழந்தைகள், வயதான பெண்மணி ஆகியோர் பலியாகி விட்டனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில்கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். ரத்தம் சொட்டச் சொட்ட அவர் வீதியில் ஓடினார். சிங்களப் படையினரின்தீவிரவாதத்திற்கு இது ஒரு உதாரணம் என்றார் இளந்திரையன்.
இதற்கிடையே, மன்னார் பகுதியில், விடுதலைப் புலிகளின் கடற்பிரிவு தளத்தைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கைராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புலிகளின் கடற் பிரிவு தளம் ஒன்றை மன்னார் பகுதியில் கைப்பற்றியுள்ளோம்.அதேபோல கிளிநிாெச்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாம் ஒன்றையும் (புலிகளிடம்இது சிக்கியிருந்தது) மீட்டுள்ளோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications