வருகிறார் பிரதமர்-வரலாறு காணாத பாதுகாப்பு
சென்னை:பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக நாளை இரவு சென்னை வருகிறார். இதையொட்டி சென்னைநகரிலும், பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் நாளை இரவு 9.15 மணிக்கு தனி விமானம் சென்னை வருகிறார். சனிக்கிழமை மாலைவரை அவர் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
சனிக்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஓரகடத்தில் நிறுவப்படவுள்ள மத்திய தேசிய வாகன சோதனைஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்கிறார்.
அதன் பின்னர் ராஜீவ் காந்தி நினைவிடம் செல்லும் மன்மோகன் சிங் அங்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர்நோக்கியா செல்போன் நிறுவனத்தை சுற்றிப் பார்க்கிறார். ராஜீவ் காந்தி பயிற்சி மையத்தையும் அவர்பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் பிளக்ஸ்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப் பூங்காவை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோரும்கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்புகிறார் பிரதமர்.
திருவனந்தபுரத்திற்கு மன்மோகன் சிங் வந்தபோது பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டு சர்ச்சை எழுந்தது.எனவே பிரதமரின் சென்னை வருகையின்போது இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடாதபடிக்கு பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மொத்தம் 10,000 போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.பிரதமர் செல்லும் வழியில் உள்ள பாலங்கள், உயரமான கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல்கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நாளை இரவு தங்கும் ஆளுநர் மாளிகை வளாகத்திலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications