சிவனாண்டி: மறுபடியும், மறுபடியும், மறுபடியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:டிஐஜி பதவியிலிருந்து எஸ்.பியாக பதவி இறக்கம் செய்தது சரியே என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பிறப்பித்ததீர்ப்பை எதிர்த்து சிவனாண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் உளவுப் பிரிவு எஸ்.பியாக இருந்தவர் சிவனாண்டி. இவரது விசுவாசத்தைக் கண்டுமகிழ்ந்த அப்போதைய அதிமுக அரசு, டிஐஜியாக அவரை பதவி உயர்த்தியது.

இதற்காக சீனியாரிட்டியை புறம் தள்ளி விட்டு புதிய பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதை எதிர்த்துசந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில்வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் சிவனாண்டிக்கு பதவி உயர்வு கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டசீனியாரிட்டி பட்டியலை ரத்து செய்தது. இதை அடிப்படையாக வைத்து அடுத்து வந்த திமுக அரசுசிவனாண்டியை எஸ்.பியாக பதவி இறக்கம் செய்து, ஊர்க்காவல் படைக்கு தூக்கிப் போட்டது.

தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகினார் சிவனாண்டி. ஆனால் அங்கு அவரது மனுதள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தீர்ப்பாயத்தை அணுகிய சிவனாண்டி, தீர்ப்பாயத்தின் முந்தையஉத்தரவை ரத்து செய்யக் கோரினார். ஆனால் அதை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டது.

இந் நிலையில் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுகியுள்ளார்சிவனாண்டி. இதுதொடர்பாக இன்று அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்றே விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+