அண்ணா பல்கலை.யில் மதர் போர்டுகள் திருட்டு
சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிதத் துறையில் கம்ப்யூட்டர்களின்மதர்போர்டுகள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கணிதத் துறையின் ஆறு அறைகளின்கதவுகளை புதன்கிழமை இரவு உடைத்து உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்தகம்ப்யூட்டர்களை கழற்றி அவற்றின் மதர்போர்டுகள், ஹார்ட் டிஸ்க்குகளைஅப்புறப்படுத்தி எடுத்துச் சென்று விட்டனர்.
நேற்று காலை பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட பின்னர் துறைக்கு வந்த கணிதத் துறைஊழியர்களுக்கு திருட்டு குறித்து தெரிய வந்தது. இதையடுத்து பல்கலைக்கழகநிர்வாகத்திற்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உயர் போலீஸார் அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து விசாரணைமேற்கொண்டனர். சென்னை காவல்துறையின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவுபோலீஸாரும் விசாரணை நடத்தியுள்ளனர்.
திருட்டு போன கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் மதர்போர்டுகளில் கணிதத்தேர்வுக்கான கேள்விகள் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன. எனவே கேள்விகளைதிருட முயன்ற கும்பல்தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும் எனசந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கம்ப்யூட்டரை அழகாக பிரித்து ஹார்ட் டிஸ்க்கையும், மதர்போர்டுகளையும்கழற்றியிருப்பதைப் பார்க்கும்போது அவர்கள் கம்ப்யூட்டர் பொறியாளர்களாகவோஅல்லது சாப்ட்வேர் என்ஜீனியர்களாகவோதான் இருக்க வேண்டும் எனவும்பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருடு நடந்த சமயத்தில் பணியில் இருந்தவர்களிடம் முதல் கட்டமாக விசாரணைநடந்துள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் துணைவேந்தர் விஸ்வநாதன் வீட்டில் மர்ம குண்டுவெடிப்புநடந்தது.
வெடித்தது குண்டா அல்லது கேஸ் சிலிண்டரா என்பதே இன்னும் தெளிவாகத்தெரியாமல் அந்த வழக்கு தொடர்ந்து இழுபறியில் உள்ளது. இந்த நிலையில்துணிகரமாக நடந்துள்ள ஹார்ட் டிஸ்க் திருட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications