மதுரை, கோவைக்கு புல்லட் ரயில்: தயாநிதி
சென்னை:சென்னையிலிருந்து மதுரைக்கும், கோவைக்கும் அதிவேக புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் இடையிலான புதிய வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர் தயாநிதி மாறன் கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் பேசுகையில், ஒருகாலத்தில் பஸ் போக்குவரத்துடன் போட்டி போட்ட ரயில்வேதுறை இன்று விமான நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளது.
ரயில்வே துறையிடம் முதல்வர் கலைஞரும், தமிழக மக்களும் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுதொடரும். கருணாநிதி முன்பு வைத்த கோரிக்கையை இங்கே நினைவுபடுத்துகிறேன்.
சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரைக்கும், கோவைக்கும் அதி வேக புல்லட் ரயில்களை விட வேண்டும்.இந்த மார்க்கத்தில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த இந்தமார்க்கத்தில் அதிக ரயில்கள் விடுவது அவசியம்.
ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளில் ரயில்கள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் சாதனத்தைப்பொருத்த வேண்டும். இதுபோலச் செய்தால் ரயில் விபத்துக்களை தவிர்க்கலாம். சமீபத்தில் கூட காஞ்சிபுரம்அருகே ஷேர் ஆட்டோ மீது ரயில்மோதி பலர் பலியாயினர் என்றார் தயாநிதி மாறன்.
இந் நிகழ்ச்சியில் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி விளம்பரத் துறை பரிதி இளம்வழுதி, சென்னை மேயர் மா.சுப்ரமணியம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications