விஜயகாந்த் ஷூட்டிங்கில் பாஜக கலாட்டா
புதுச்சேரி:புதுச்சேரியில் கோவிலுக்குள் விஜயகாந்த் படப்பிடிப்பு நடத்தப்படுவதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால்,ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது.
விஜயகாந்த் சபரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகநடந்து வருகிறது. அவரும் ஹீரோயின் ஜோதிர்மயியும் சம்பந்தப்பட்ட சில காட்சிகள், காந்தி வீதியில் உள்ளவேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.
படப்பிடிப்பையடுத்து கோவிலின் பிரதான வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தெற்குப் புறம்உள்ள வாசல் வழியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. ஆகியஅமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
பாஜக இளைஞர் அணி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் பாஜகவினரும், இந்து முன்னணி, வி.எச்.பி.தொண்டர்கள், வேதபுரீஸ்வரர் கோவில் திருமுறை வழிபாட்டுக் குழு தலைவர் சந்தானம் உள்ளிட்டோர் அங்குதிரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனடியாக விஜயகாந்த் அங்கிருந்துபுறப்பட்டுச் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து படக் குழுவினருக்கும், இந்து அமைப்புகளின்தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
கோவிலின் புனிதம் கெடும் வகையிலும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் படப்பிடிப்பை நடத்தக்கூடாது, கோவிலுக்குள் படப்பிடிப்பு நடத்த விட மாட்டோம் என இந்து அமைப்பினர் கூறினர். இதைத்தொடர்ந்து போலீஸார் வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications