செல்போன் சில்மிஷம்: போலீஸ் தீவிர கண்காணிப்பு
சென்னை:செல்போன் கேமரா மூலம் ரயில் நிலையங்களுக்கு வரும் பெண்களை ஆபாச கோணத்தில் படம் எடுக்கும்விஷமிகளைப் பிடிக்க சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் சாதாரண உடையில் போலீஸார் தீவிரமாககண்காணித்து வருகின்றனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வரும் குடும்பப் பெண்களை அவர்கள் குனியும்போதும், சேலைவிலகியுள்ள நிலையிலும், இடுப்புப் பகுதிகள், பின்புறம் உள்ளிட்ட பகுதிகளை செல்போன் கேமரா மூலம் படம்பிடித்து அவற்றை இணையதளத்தில் புழக்கம் விட்ட விஷமச் செயல் குறித்த தகவல்கள் வெளியானது.
இது பெண்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட படத்தால் பாதிக்கப்பட்டபெண்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், ரயில்வே போலிஸிலும் புகார்கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண்களை செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்கும்விஷமிகளைப் பிடிக்க மாறு வேடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையத்துக்கு வருவோர் செல்போனும், கையுமாக சந்தேகத்திற்கிடமாக திரிந்தால் அவர்களை இந்தசாதாரண உடைப் பெண் போலீஸார் தடுத்து நிறுத்தி செல்போனை வாங்கி சோதனை செய்கின்றனர். சேலையில்வரும் பெண் பயணிகளிடம், கூடுதல் விழிப்புணர்வோடு இருக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.
இதேபோல எழும்பூர் உள்ளிட்ட பிற ரயில் நிலையங்களிலும் போலீஸார் சாதாரண உடையில்குவிக்கப்பட்டுள்ளனர். செல்போன்களுடன் வருபவர்களை இந்தப் போலீஸார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
ஆபாசப் படக் கும்பலால் பயந்துள்ள மின்சார ரயில்களில் தினசரி பயணிக்கும் பெண்கள், ஆண்களும் ஏறும்பொதுப் பெட்டிகளில் பயணிப்பதை விட பெண்களுக்கான பெட்டியில் பயணிப்பதையே தற்போது அதிகம்நாடுவதால் பெண்கள் பெட்டிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications