புல்லட் ரயில்: பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை
சென்னை:சென்னையிலிருந்து மதுரை மற்றும் கோவை ஆகிய முக்கிய நகரங்களுக்கு புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரமதர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர்கருணாநிதி மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
நேற்று இரவு சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் வரவேற்ற முதல்வர் கருணாநிதி,பின்னர் ஆளுநர் மாளிகையில் அவரை சந்தித்து தமிழகம் தொடர்பான 7 கோரிக்கைகள் அடங்கிய மனுவைபிரதமரிடம் அளித்தார். அப்போது தலைமைச் செயலாளர் திரிபாதி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்ஆகியோரும் உடன் இருந்தனர்.
பிரதமரிடம் முதல்வர் கொடுத்த கோரிக்கை மனு விவரம்:
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ள நிலையில் கொளச்சல் துறைமுகத்தை பெரிய துறைமுகமாக மாற்றமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்குப் பெட்டகங்களை கையாள கொளச்சல் துறைமுகம் மிகவும்முக்கிய மையமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
வாட் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளதால் தமிழக அரசு அடுத்த நிதியாண்டில் ரூ. 1250 கோடி இழப்பைசந்திக்கக் கூடிய நிலை உள்ளது. இதை சரி செய்ய மத்திய அரசு முழுமாைன இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள சாயத் தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில், கழிவு நீர் சுத்திகரிப்புசாதனங்களை நிறுவ மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும். மொத்தம் உள்ள 483 தோல் தொழிற்சாலைகளின்கழிவு நீரை சுத்திகரிக்கத் தேவையான 10 சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவ ரூ. 116.16 கோடி செலவாகும்.
இதில் 75 சதவீதத் தொகையை மத்திய அரசு நிதியுதவியாக வழங்க வேண்டும். இதேபோல திருப்பூரில் ரூ.593.27கோடி செலவில் அமைக்கப்படவுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு 75 சதவீத தொகையை மானியமாகமத்திய அரசு வழங்க வேண்டும்.
சென்னை அருகே நிர்மாணிக்கப்படவுள்ள கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாகநிதியுதவி அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் இலவச டிவி திட்டத்தின் கீழ் 80 லட்சம் டிவிகளை வாங்குவதற்கு ரூ.335 கோடி செலவாகும்.இந்த்த திட்டத்திற்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
டெல்லி, மும்பையைப் போல சென்னை விமான நிலையத்தையும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையிலிருந்து மதுரை, கோவை உள்ளிட்டமுக்கிய நகரங்களுக்கு புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்தவேண்டும்.
இந்தக் கோரிக்கை மனுவின் நகலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவரிடம் கொடுத்தார்கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications