கைதான திமுக எம்.எல்.ஏ. ஜாமீனில் விடுதலை
சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த போலீஸ் புகாரின் பேரில் கைதுசெய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. பாபு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக திமுகவினர் மீது மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கடும் குற்றம் சாட்டியது. அக்கட்சியின் வேட்பாளர் தேவியை,திமுகவைச் சேர்ந்த புரசைவாக்கம் எம்.எல்.ஏ. வி.எ.பாபு கடுமையாக தாக்கியதாகவும்அக்கட்சி புகார் கூறியது.
இந் நிலையில் தேவி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். அந்தப் புகாரை முதலில் பெற மறுத்தது போலீஸ். ஆனால் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் குற்றச்சாட்டு மற்றும் தமிழகம் முழுவதும் போராட்டம்நடத்தப் போவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் அறிவித்ததால்,திமுக தரப்பு தர்மசங்கடத்தில் ஆழ்ந்தது.
இந் நிலையில் தேவியின் புகாரைப் பதிவு செய்த போலீஸார் நேற்று திடீரெனஎம்.எல்.ஏ. பாபுவைக் கைது செய்தனர். இதையடுத்து திமுகவினர் காவல் நிலையம்முன் கூடி பாபுவை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம் நடத்தினர்.
அவர்களை சமாதானப்படுத்திய திமுக தலைவர்கள் அவர்களை கலைந்து போகச்செய்தனர். இந் நிலையில், கைது செய்யப்பட்ட பாபு மீது கைகளால் தாக்குதல்,சட்டவிரோதமாக கூடுதல், அவதூறாகப் பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகியபிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பாபுவையும், உடன் கைது செய்யப்பட்ட சின்னத்துரையையும் எழும்பூர் 14வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் இருவர்சார்பிலும் ஜாமீன் கோரி நீதிபதி கோவிந்தராஜிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதை ஏற்ற நீதிபதி, இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் உள்ளே போன வேகத்திலேயே வெளியே வந்து விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications