திருச்சி: ஜீயர் மடம் அருகே விவசாயி பிணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சியில் உள்ள திருச்செந்துரை ஜீயர் மடம் அருகே விவசாயி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்ததுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் கடைக்காகுறிச்சி கிராமப் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முகம். இவரது தம்பிஇளங்கோவன். விவசாயியான இவர் நேற்று முதல் காணவில்லை. இதுகுறித்து போலீஸிலும் புகார்கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இளங்கோவனின் பிணம் இன்று காலை திருச்செந்துரை ஜீயர் மடம் அருகேகண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் மிகக் கொடூரமாக வெட்டப்பட்டிருந்தது.
இளங்கோவனின் பிணத்தைப் பார்த்தவர்கள் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். அரசியல் முன்விரோதம்அல்லது நிலத் தகராறு காரணமாக இளங்கோவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து ஜீயர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications