தமிழக அரசுக்கு துணையாக இருப்போம்-பிரதமர்
சென்னை:தமிழகத்தை நாட்டிலேயே முன்னேற்றமடைந்த மாநிலமாக மாற்றும் தமிழக அரசின்முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த ஒரகடத்தில் தேதிய வாகன ஆய்வு மற்றும் சோதனை மையம்அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் ஆளுநர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி,மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன், ராஜா, அன்புமணி, மாநிலஅமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், உலக அளவிலும், தேசியஅளவிலும், வாகனத் துறையில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நுகர்வோரின்தேவைக்கேற்ப வாகனங்களின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதுஅவசியம். அதற்காகத்தான் இந்த ஆய்வு மையம் இங்கு அமைக்கப்படுகிறது.தமிழகத்தில் தொழில்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. சென்னை தவிரமதுரை மற்றும் கோவை ஆகிய பெருநகரங்களிலும் தொழில் வளர்ச்சிக்கானதிட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குளச்சல் துறைமுகத்தை முழுமையான துறைமுகமாக மாற்றுவது குறித்து மத்திய அரசுதீவிரமாக பரிசீலிக்கும்.
முதல்வர் கருணாநிதி எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசுஉறுதுணையாக இருக்கும். அவரது முயற்சிகள், நடவடிக்கைகள் அனைத்தும்வரவேற்புக்குரியவை.
கடந்த 2 ஆண்டு காலமாக சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தைமுன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப் பாடுபட்டு வருகிறோம் என்றார் பிரதமர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், வறுமை உள்ளிட்ட பல்வேறுசவால்கள் நம் முன் உள்ளன. இவற்றை சமாளிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங், அவரது அமைச்சரைவ மற்றும் நிர்வாக சகாக்கள் மற்றும்முதல்வர் கருணாநிதியின் சீரிய வழிகாட்டுதல் மற்றும் உதவியால் இந்த சவால்களைஎளிதில் சமாளிக்க முடியும்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்செயல்பாடுகளில் மத்திய அமைச்சர்களின் பங்கு பாராட்டுக்குரியது என்றார்சோனியா.
உற்சாக வரவேற்பு:
முன்னதாக நேற்று இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்குவிமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அவர்களை ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள்ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், அன்புமணி, ஜி.கே.வாசன், இளங்கோவன், ராஜா, ஆர்.வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மாநில அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, பரிதி இளம்வழுதி, பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஆகியோரும் பிரதமரையும், சோனியா காந்தியையும் வரவேற்றனர்.
மதிமுக எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரனும் பிரதமரை வரவேற்றவர்களில் ஒருவர். வரவேற்புக்குப் பின்னர் இருவரும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுஇரவு தங்கினர். இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமரும், சோனியா காந்தியும் கலந்து கொள்கின்றனர்.
பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:
காலை 10 மணி: சென்னை அருகே ஓரகடத்தில் தேசிய வாகன சோதனை மற்றும் ஆய்வு மைய அடிக்கல் நாட்டு விழா.
11.30 மணி: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி.
11.50 முதல் 12.45 மணி வரை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையை பார்வையிடுதல்.
12.50 மணி: ராஜீவ் காந்தி பயிற்சி நிலையத்திற்கு விஜயம்.
2.30 மணி: சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் உள்ள பிளக்ஸ்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பப் பூங்கா தொடக்க விழா.
4.05 மணி: டெல்லி திரும்புதல்.
பிரதமரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சோனியா காந்தியும் பங்கேற்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications