சிறுவனை வேலைக்கு வைத்த ஓனர் மீது வழக்கு
நாகப்பட்டனம்:இந்தியாவிலேயே முதல் முறையாக 13 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஹோட்டல் உரிமையாளர் மீதுசிறார் தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இச்சட்டத்தை மீறி சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனஅரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த சட்டத்தின் கீழ் நாகையைச் சேர்ந்த ஹோட்டல்உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை வந்த தஞ்சையைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பின் நிர்வாகிகளான அமீர் மற்றும் மாதவன் ஆகியோர்,அங்கு பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் 13 வயது சிறுவன் வேலை செய்து கொண்டிருந்ததைப்பார்த்தனர்.
அவனிடம் அவர்கள் விசாரித்தபோது தனது பெயர் மோகன் என்றும் 6வது வகுப்பு வரை படித்துள்ளதாகவும்,நாகை அருகே உள்ள கருவங்குளத்தடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரிவித்தான்.
இதையடுத்து நாகை டவுன் காவல் நிலையத்தில் அமீர் புகார் கொடுத்தார். சிறார் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து அச்சிறுவனை மீட்க வேண்டும் என்றுகோரினார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர்தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications