காணாமல் போன 5 சென்னை மீனவர்களும் பலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை:கடலுக்குள் மீன் பிடிக்குச் சென்று காணாமல் போய் விட்ட சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் படகுபூம்புகார் அருகே கரை ஒதுங்கியுள்ளது. இதனால் அவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்திருக்கலாம் எனஅஞ்சப்படுகிறது.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த மாதம் 23 ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள்யாரும் குறித்த நாளில் கரை திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிலையில் இவர்களில் 18 பேர் 3 பிரிவுகளாக வீடு திரும்பினர். ஆனால் மற்ற 5 பேரின் கதி குறித்துத்தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னை மீனவர்கள் 5 பேரும் பயணித்த படகு,பூம்புகார் அருகே கரை ஒதுங்கியது.

விசைப் படகு மட்டும் கரை ஒதுங்கியுள்ளதால் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் எனஅஞ்சப்படுகிறது. இதனால் ராயபுரம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமிஅங்கு விரைந்து வந்து மீனவர்களிடம் பேசினார்.

5 பேரும் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில்தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

3 இலங்கை மீனவர்கள் மீட்பு:

இதற்கிடையில் 28 நாட்களாக நடுக் கடலில் தத்தளித்து வந்த 3 இலங்கைத் தமிழ் மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பூம்புகார் கடற்கரையில், நேற்று இரவு ஒரு படகில் 3 பேர் மயங்கி நிலையில் காணப்பட்டனர். இதுகுறித்து பூம்புகார் பகுதி மீனவர்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர்அவர்களை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை, அம்மன்தோட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் என்பது தெரிய வந்தது. கடந்த மாதம் 5ம்தேதி இவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். ஆனால் மோசமான வானிலை மற்றும் வழி தவறி விட்டதால், நடுக் கடலில் தத்தளித்துள்ளனர்.

கடந்த 28 நாட்களாக கடலில் தத்தளித்த அவர்கள் 3 பேரும் மீன்களை காய வைத்துச் சாப்பிட்டும், மழை நீர், கடல் நீரைக் குடித்தும் உயிர் பிழைத்துள்ளனர்.

நேற்று இரவு மயங்கிய நிலையில் பூம்புகாரில் இவர்களின் படகு ஒதுங்கியுள்ளது. இவர்களுக்கு பூம்புகார் பகுதி மீனவர்கள் சாப்பாடு கொடுத்து ஆறுதல்தெரிவித்தனர்.

3 பேரையும் பாஸ்போர்ட் சட்டப்படி போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+