வீட்டுக்குள் ஓட ஓட விரட்டி 4 பேர் படுகொலை
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் வீட்டைப் பூட்டி விட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை ஓட ஓட விரட்டி படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கலா.இவர்களுக்கு சாந்தினி, கிருஷ்ணவேணி என இரு மகள்கள் உள்ளனர். சாந்தினி 11ம் வகுப்பும், கிருஷ்ணவேணி5ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கணேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் அங்கிருந்து சில மாதங்களுக்கு முன்பு ராஜபாளையம்திரும்பி விவசாயத்தில் ஈடுபட்டார். அத்தோடு வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலையும் மேற்கொண்டார். நேற்று மாலையில் கணேசன் வீட்டு கதவு இடுக்கு வழியாக ரத்தம் வழிந்தோடியது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.போலீஸார்விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது கணேசன், அவரது மனைவி, இரு மகள்கள் மிகக்கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அந்த வீட்டில் உள்ள நான்கு அறைகளிலும் ரத்தம் சிதறிக் கிடந்தது. நான்கு பேரையும் வீட்டுக்குள் ஓட ஓடவிரட்டிக் கொலை செய்துள்ளதாக கருதப்படுகிறது. இவ்வளவு நடந்தும் அக்கம் பக்கத்தில் சத்தம் ஏதும்கேட்கவில்லை. வீட்டைப் பூட்டிக் கொண்டு டிவியை சத்தமாக வைத்து விட்டு கொலையாளிகள் இந்தபடுகொலையை செய்துள்ளனர்.
வீட்டில் நகைகள், பொருட்கள் எதுவும் திருட்டுப் போனதாக தெரியவில்லை. எனவே கணேசனுக்குத்தெரிந்தவர்கள்தான் இந்தக் கொலையை செய்திருக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
நான்கு பேர் வீட்டுக்குள் ஓட ஓட விரட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications