தேசிய கீதம் பாடாமல் முடிந்த பிரதமர் நிகழ்ச்சி
சென்னை:பிரதமர் கலந்து கொண்ட தேசிய வாகன ஆய்வு மைய அடிக்கல் நாட்டு விழா தேசிய கீதம் பாடப்படாமல்முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே ஓரகடம் என்ற இடத்தில் தேசிய வாகன ஆய்வு மற்றும் பரிசோதனை மையம்அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கினார். அனைவரும் பேசிமுடித்தவுடன், கடைசியாக மத்திய இணை அமைச்சர் காந்தி சிங் நன்றியுரை வழங்கினார். இதையடுத்து தேசியகீதம் ஒலிக்கப்படும் என அனைவரும் எழுந்து நின்றனர்.
அப்போது மைக் முன் வந்த ஜேம்ஸ் வசந்தன், தலைவர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் நிகழ்ச்சிக்குவந்த பார்வையாளர்கள் வெளியேறுமாறும், அதுவரை இருக்கையில் அமர்ந்திருக்குமாறும் அறிவித்தார்.
ஆனால் தேசிய கீதம் பாடப்படும் என அவர் அறிவிக்கவில்லை. இதனால் தேசிய கீதத்திற்காக எழுந்த நின்றபிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வியப்படைந்தனர். சுதாரித்துக் கொண்ட மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்,ஜேம்ஸ் வசந்தனிடம் சென்று தேசிய கீதம் ஒலிக்கப்படும் என அறிவியுங்கள் என்றார். ஆனால் வசந்தனோ, அதுநிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படவில்லையே என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.
சில விநாடிகள் தேசிய கீதத்திற்காக காத்திருந்த பிரதமர் உள்ளிட்டோர் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி தேசிய கீதம் ஒலிக்கப்படாமலேயே முடிந்ததுசர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் குமாரவேலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்விடுத்துள்ள அறிக்கையில், வந்தே மாதரம் பாடலையே பாட மறுப்பு தெரிவித்தவர்கள், தேசிய கீதத்தைமறந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. சோனியா காந்தி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தேசிய கீதத்தைப்பாட வேண்டாம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ என்று கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications