மதிமுக பஞ்சாயத்துத் தலைவர் படுகொலை
விழுப்புரம்:திண்டிவனம் அருகே மதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக பாமக பிரமுகர் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் கேணிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் ராஜேந்திரனும், பாமகசார்பில் ஏழுமலை என்பவரும் போட்டியிட்டனர். இதில் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இதனால் ஏழுமலைக்கும்,ராஜேந்திரனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் தேர்தலுக்குப் பின் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் தனது வயலில் ராஜேந்திரன்அமர்ந்திருந்தார். அப்போது ஏழுமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் கும்பலாக அங்கு வந்தனர்.ராஜேந்திரனை சுற்றிச் சூழ்ந்த கொண்டு சரமாரியாக அரிவாள்களால் வெட்டினர்.
இதில் ராஜேந்திரன் துடிதுடித்து இறந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜேந்திரனின்உறவினர்களும், கிராம மக்களும் ஏழுமலையின் ஆதரவாளரான ராஜா என்பவரின் வீட்டை தீவைத்துக்கொளுத்தினர். இதில் வீடும், மாட்டுத் தொழுவும் எரிந்து தீக்கிரையானது.
கிராமம் முழுக்க பதட்டம் நிலவுவதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகி விட்டஏழுமலை மற்றும் 10 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications