பொது மன்னிப்பு கோரும் ராக்கெட் ரகு!
வாரங்கல்:ராக்கெட் லாஞ்சர் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ரகு என்ற டெக் மது என்ற சீனிவாச ரெட்டியும், அவரதுமனைவி சுதாராணியும் பொது மன்னிப்பு கோரியுள்ளனர். இருவரும் சரணடைந்துள்ளதை ஆந்திர மாநிலபோலீஸார் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் கடத்தப்பட்ட வழக்கில் மது மற்றும் அவருடன்தங்கியிருந்த சுதாராணி ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இருவரும் ஆந்திர மாநில காட்டுப் பகுதியில்தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் 27ம் தேதி இருவரும் வாரங்கல் மாவட்டம் கூடூர் காவல் நிலையத்தில்சரணடைந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவலை ஆந்திர மாநில டிஜிபி மறுத்தார். இருவரும்சரணடையவில்லை என்று தெரிவித்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டது.
இருப்பினும் மதுவையும், சுதாராணியையும் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தனர் என்றுகூறப்பட்டது. இருவரிடம் ஆந்திரா மற்றும் சென்னை போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சனிக்கிழமை மதுவையும், சுதாராணியையும் போலீஸார் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்ஆஜர்படுத்தினர். வாரங்கல் சரக டிஐஜி ரவி குப்தா, மாவட்ட எஸ்.பி. செளம்யா மிஸ்ரா ஆகியோர் மதுவையும்,சுதாராணியையும் செய்தியாளர்கள் முன்பு ஆஜர்படுத்தினர்.
இருவரும் போலீஸாரிடம் சரணடைந்துள்ளதாக அப்போது டிஐஜி ரவிகுப்தா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.அப்போது செய்தியாளர்களிடம் மது பேசினார். அவர் கூறுகையில், மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு நாங்கள்ராக்கெட் லாஞ்சர்கள், ராக்கெட் குண்டுகளைத் தயாரித்துக் கொடுத்தது உண்மைதான்.
நக்சலைட் அமைப்பை மிகப் பெரியதாக நினைத்தோம். நாட்டையே வளப்படுத்துவோம் என்றனர். ஆனால்அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர்களால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குவரவில்லை.
திருந்தி வாழ விரும்புகிறோம். எனக்கும், மனைவி சுதாராணிக்கும் அரசு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும்என விரும்புகிறோம் என்றார் ரகு.
கடந்த 1986ம் ஆண்டு முதல் சிபிஐ (மாவோயிஸ்ட்) என்ற நக்சலைட் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வந்தார்மது. அந்த அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகராக செயல்பட்டு வந்தார். நல்லமலைக் காட்டில் அவர் வசித்துவந்தார். 2003ம் ஆண்டு சுதாராணியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த வருடமே அவர்கள் இருவரும்சென்னைக்கு இடம் பெயர்ந்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications