சுனாமி சோகத்தை துடைத்த இரட்டை குழந்தைகள்!
கொச்சி:சுனாமியில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பெண், கருத்தடை நீக்க அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும்கருத்தரித்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஆலப்பாடு என்ற ஊரைச் சேர்ந்தவர் லிஸ்ஸி, ஸ்ரீஜித் தம்பதியினர். கடந்த2004ம் ஆண்டு வந்த சுனாமி தாக்குதலில் இவர்களின் எட்டு வயது மகள் அலிஷாவும், 4 வயது மகன்காளிதாசனும் இறந்து போயினர். இதனால் குழந்தைகளை இழந்து தவிப்புக்குள்ளாகினர் லிஸ்ஸி, ஸ்ரீஜித்தம்பதியினர்.
இந்த நிலையில் லிஸ்ஸிக்கு கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில்கருத்தடை நீக்க அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரைப் போலவே மேலும் 7 பெண்களுக்கும்கருத்தடை நீக்க அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.அவர்களில் லிஸ்ஸி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் கர்ப்பம் தரித்தனர். அவர்களில் ஒரு பெண்ணுக்கு கடந்த மாதம்பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் லிஸ்ஸிக்கு அக்டோபர் 30ம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் ஒருபையனும், பெண்ணுமாக இரட்டைக் குழந்தை பிறந்தது.
தாயும், சேய்களும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருத்தடை நீக்க அறுவைச்சிகிச்சைக்குப் பின்னர் கர்ப்பம் தரித்து, அதிலும் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அபூர்வம் என டாக்டர்கள்கூறியுள்ளனர்.
சுனாமிக்கு மகனையும், மகளையும் இழந்த லிஸ்ஸி தம்பதியினர் தற்போது இரட்டைக் குழந்தைகளை, அதுவும்மகன், மகளைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அளவு கடந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications