புஷ் கட்சி ஜெயிக்க சதாமுக்கு தூக்கு?
வாஷிங்டன்:அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நாளை நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சிவெற்றி பெறுவதற்காக, புஷ்ஷின் வலியுறுத்தலால் சதாம் உசேனுக்கு அவசரம் அவசரமாக தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஷியா பிரிவு முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் சதாம் உசேன் உள்ளிட்ட 3 பேருக்கு தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் இந்தத் தண்டனையை கொடுத்துள்ளதால்இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் புஷ்ஷின் வற்புறுத்தலால் தான் சதாமுக்கு அவசரம் அவசரமாக தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டதாக புகார் கிளம்பியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு நாளை தேர்தல்நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் புஷ்ஷின் குடியரசுக் கட்சி தோல்வியைத் தழுவும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.இதையடுத்தே புஷ்ஷின் வலியுறுத்தல் காரணமாக, தேர்தலில் வெற்றி பெறும் பொருட்டு, சதாமுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சதாமின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
இக்கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்திருப்பதால் இந்த சர்ச்சை சூடு பிடிக்கஆரம்பித்துள்ளது. இதற்கிடையே, பாரபட்சமான விசாரணையை நடத்தி சதாமுக்கு தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளதாக சீன மற்றும் தென் கொரிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிபிஎம் ஆர்ப்பாட்டம்:
இதற்கிடையே, வேலூரில் சதாம் உசேனுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவைக் கண்டித்தும் இன்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது அடாவடித்தனமான தீர்ப்பு, அமெரிக்காவால் நிச்சயிக்கப்பட்ட தீர்ப்பு. சதாமுக்கு தூக்குத் தண்டனையை ரத்துசெய்து அவரை விடுவிக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications