மது: சிக்கிய பெண் சாப்ட்வேர் என்ஜீனியர்கள்
சென்னை:சென்னையில் உள்ள 3 நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த போலீஸ் சோதனையில் ஏராளமான பெண் சாப்ட்வேர்என்ஜீனியர்கள், கால் சென்டர் பெண்கள் பிடிபட்டனர். அவர்களை கடுமையாக எச்சரித்த போலீஸார் பின்னர்விடுவித்தனர்.
சென்னையில் உள்ள 30க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவில் மதுவுடன் கூடிய கேளிக்கைநிகழ்ச்சிகளும், ஆட்டம், பாட்டம் அமர்க்களப்படுவதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.
நள்ளிரவுக்கு மேல் மது பார்களை திறக்கக் கூடாது என்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்படுவதாகவும்போலீஸாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இதையடுத்து நட்சத்திர ஹோட்டல்களில் அதிரடி சோதனை நடத்தபோலீஸார் திட்டமிட்டனர்.
ஆயிரம் விளக்கு கிராண்ட் ஓரியன்ட், ராதாகிருஷ்ணன் சாலை சவேரா ஹோட்டல் ஆகியவற்றில் போலீஸார்அதிரடி சோதனை நடத்தினர். உதவி ஆணையர் ராமசுப்ரமணி தலைமையிலான போலீஸ் படை கிராண்டஓரியண்ட் ஹோட்டலில் ரெய்டு நடத்தியது.
நள்ளிரவைத் தாண்டி 1 மணி ஆகியும் கூடு சூடு குறையாமல் மது விருந்துடன், கேளிக்கை நிகழ்ச்சிகள்அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தன. நடனம் ஆடிய பல பெண்களின் உடல்களில் உடைகள் பேருக்குத்தான்ஒட்டிக் கொண்டிருந்தன. இதையடுத்து ஹோட்டல் மற்றும் பார் மேலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.அவர்களோடு மேலும் 14 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் ஜாமீனில்விட்டு விட்டனர்.
சவேரா ஹோட்டலில் நடந்த சோதனையில் 12 பேர் சிக்கினர். அவர்களையும் ஜாமீனில் விட்டு விட்டனர்.
சனிக்கிழமை இரவு நடந்த அதிரடி சோதனையில், ஏராளமான கால் சென்டர் பெண் ஊழியர்கள், பெண்சாப்ட்வேர் என்ஜீனியர்கள் மதுவுடன் ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. சில உயர் காவல்அதிகாரிகள் வீட்டுப் பெண்களும் இதில் இடம் பெற்றிருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களது வேலைப் பளுவிலிருந்து ஓய்வு பெறவே இவ்வாறு வந்தோம். இதை நாங்கள் ரெகுராக செய்வதில்லைஎன்று சாப்ட்வேர் என்ஜீனியர்களும், கால் சென்டர் பெண் ஊழியர்களும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்களை எச்சரித்து போலீஸார் விட்டு விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications