சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது ஆஸி

Subscribe to Oneindia Tamil

மும்பை:மும்பையில் நடந்த மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல் முறையாக சாம்பியன்ஆகியுள்ளது.

சாம்பியன் கோப்பை சுற்று ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.இந்த நிலையில் அதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் வகையில், நேற்றைய இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாகளம் கண்டது.

டாஸில் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்கஆட்டக்காரர்களான கெயில் மற்றும் சந்தர்பால் ஆகியோர் அதிரடியாக ஆடினர். இதனால் பெரிய அளவில் ரன்குவிக்கும் மேற்கு இந்தியத் தீவுகள்என எதிர்பார்ப்பு எழுந்தது.

அணியின் எண்ணிக்கை 49 ரன்கள் இருந்த போது சந்தர்பால் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்தசர்வான், லாரா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதற்குப் பின்னர் வந்த அனைத்து வீரர்களுமேசொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவு வீரர்கள் தடுமாறினர்.கெயில் மட்டும் 37 ரன்கள் எடுத்தார். சந்தர்பாலுக்கு 27 ரன்னும், பிரேவோவுக்கு 21 ரன்னும் எடுத்தனர். மற்றவீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தைக் கூட தாண்ட முடியவில்லை.

இறுதியில், 30.4 ஓவர்களிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணி 138 ரன்களில் சுருண்டு போனது.ஆஸ்திரேலியா தரப்பில் மெக்கிராத் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அவரை விடபடு மோசமான பந்துவீச்சாளர் பிரேக்கன் தான். 3 விக்கெட்டுகளைப் பறித்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியைநிலை குலைய வைத்தார் பிரேக்கன்.

வாட்சனுக்கு 2 விக்கெட்டுகளும், பிரெட் லீ, ஹாக் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 139 என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கியது ஆஸ்திரேலியா. ஆனால் அதிர்ச்சி அளிக்கும்விதமாக கில்கிறைஸ்ட்டும், கேப்டன் பாண்டிங்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஆட்டத்தில் பரபரப்புஏற்பட்டது.

ஆனால் ஷேன் வாட்சனும், டேமியன் மார்ட்டினும் அடித்து ஆடினர். 10 ஓவர்களில் 45 ரன் சேர்ந்திருந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இரவு 9 மணியளவில் மீண்டும் ஆட்டம்தொடங்கியது.

35 ஓவர்களில் 116 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியாதொடர்ந்து விளையாடியது. மார்ட்டினும், வாட்சனும் இணைந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிஅணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 28.1 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா வெற்றிக்குத்தேவையான 116 ரன்களை எடுத்து முதல் முறையாக சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் இதுவரை இறுதிப் போட்டிக்கே ஆஸ்திரேலியா முன்னேறியதில்லை. ஆனால் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு வந்ததுடன், நடப்புச் சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்திமுதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது.

ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலியாவின் வாட்சனும், தொடர் நாயகனாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின்கெயிலும் தேர்வு செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+