சதாமுக்கு தூக்கு: கருணாநிதி-ஜெ எதிர்ப்பு
சென்னை:ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு திமுக தலைவரும்,முதல்வருமான கருணாநிதி அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மரண தண்டனை என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைப் புத்தகத்தில் சில பக்கங்களை நீக்குவது போலாகும்.ஆனால் இதன் மூலம் திருந்திய பக்கங்களை மறு பதிப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடுகிறது.
இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, சதாம் உசேன் போன்ற சர்வாதிகளுக்கும் கூட பொருந்தும் என்றுகூறியுள்ளார்.
முன்பு, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது மரணதண்டனை மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.ஜெ கண்டனம்:
சதாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈராக் நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது நீதியை கேலிக்கூத்தாக்கிபோலி நாடகம் அரங்கேறியிருப்பதையே காட்டுகிறது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு நாட்டில் அமெரிக்காவால் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் இதைத் தவிர வேறுதீர்ப்பை எதிர்பார்க்க முடியாது. அமெரிக்காவின் கைப்பாவையாக நீதிமன்றம் செயல்பட்டுள்ளது.
விசாரணையின்போது ஏராளமான எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் மர்மமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 முறைநீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். நீதித்துறையை இவ்வாறு தவறாக பயன்படுத்தியகை இந்திய அரசு வன்மையாககண்டிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு ஏற்கக் கூடியதே அல்ல.
நான் மட்டுமல்ல நீதி, சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications