பட்டினியில் தவிக்கும் ஈழத் தமிழர்கள்!
சென்னை:யாழ்ப்பாணத்தில் ராணுவ முற்றுகையில் சிக்கியிருக்கும் தமிழர்கள் சாப்பாடு கூட கிடைக்காமல் பட்டினியில்தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவ இந்தியா முன்வர வேண்டும் என்று இலங்கையைச் சேர்ந்த எம்.பி.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவம் தாக்குதலைதீவிரப்படுத்தியுள்ளது. இனப் படுகொலை உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம்-கொழும்பு இடையிலான நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால், தமிழர்கள் பெரும்பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களுக்கு அங்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு பெரும்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 6 லட்சத்து 58 ஆயிரம் மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 11 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் தேவை. ஆனால் கடந்த 3 மாதத்தில் வெறும் 19 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள்மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது.
மக்கள் உணவுப் பற்றாக்குறையால் பட்டினிச் சாவுக்கு ஆளாகியுள்ளனர். சாதாரண கொசு வர்த்தியின் விலை கூட4 மடங்கு அதிகமாக உள்ளது. பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்களால் முடியவில்லை. நீண்டவரிசையில் நின்று ரொட்டிகளை வாங்கிச் சென்று மூன்று வேளையும் அதையே சாப்பிடுகின்றனர்.
பட்டினிச் சாவுகள் ஏற்படுவதை கண்டும் காணாமலும் நடந்து கொள்ளும் இலங்கை அரசை இந்தியா கடுமையாககண்டிக்க வேண்டும். யாழ்ப்பாணம் மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பவேண்டும். பட்டினிச் சாவுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்தது செல்லாது என்று இலங்கை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதைஎதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இப்பிரச்சினையில் இந்தியா எங்களுக்கு உதவவேண்டும் என்றார் சிவாஜி லிங்கம்.பேட்டியின்போது உலகத் தமிழர் பேரவைத் தலைவர் ஜனார்த்தனம் உடன் இருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications