கன மழை: 200 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
சென்னை:வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பதால்,இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக 200 கிராமங்களுக்குவெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கும், ஆந்திரத்திற்கும் இடையே வங்கக் கடலின் தென் மேற்குப் பகுதியில் சில நாட்களுக்கு முன்புஉருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவுமுழுவதும் விடிய விடிய தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில்தான் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. இங்குள்ள பேரையூரில் 90 மில்லிமீட்டர்மழை பதிவாகியுள்ளது. இதேபோல நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பாம்பன், புதுக்கோட்டை, ஆலங்குளம்உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளது.
தொடர்ந்து 2 நாட்களுக்கு தமிழகத்திலும், புதுவையிலும் மிதமான மற்றும் கன மழை பெய்யலாம் என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையைச் சுற்றிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஏரிகள்நிரம்பி வருகின்றன. பல ஏரிகள் ஏற்கனனவே நிரம்பி விட்டன. எனவே இந்த மாவட்டங்களில் உள்ள 200க்கும்மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கி வரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம்ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக இரு மாவட்டங்களிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகும் வாய்ப்புஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தக்க முன்னேற்பாடுகளை இரு மாவட்ட நிர்வாகங்களும் செய்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications