ராஜபக்ஷேவை எதிர்த்து போராட்டம்: ராமதாஸ்
திண்டிவனம்:டெல்லிக்கு வருகிற 17ம் தேதி வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்குக் கண்டனம் தெரிவித்துசென்னையில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ்பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் மீது முப்படைகளை ஏவி தாக்குதலை முடுக்கி விட்டுள்ள இலங்கைஅதிபர் ராஜபக்ஷே வருகிற 17ம் தேதி டெல்லி வருகிறார். இந்த தினம் தமிழர்களுக்கு கருப்பு தினமாகும்.
ராஜபக்ஷே டெல்லிக்கு வரும் நாளன்று தமிழகத்தில் தமிழர்களின் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பைவெளிப்படுத்த வேண்டும். யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளை இலங்கைஅரசு மூடி விட்டது. இதனால் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள்கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பட்டினிச் சாவுகளை இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.
தறபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளை ஏவி பெரும் தாக்குதலை தொடுக்க இலங்கைஅரசு தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.பேச்சுவார்த்தை நடத்தவது போல நாடகமாடி விட்டு மறுபுறம் தாக்குதலையும் தீவிரப்படுத்துமாறு முப்படைகளைதூண்டி விட்டு இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறார் ராஜபக்ஷே.
இந்த நிலையில் இந்தியாவுக்கு வரும் ராஜபக்ஷேவைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும்செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் பாமக சார்பில் சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.அன்றைய தினம் தமிழகம் முழுவதும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ராஜபக்ஷேவுக்கு கண்டனம்தெரிவிக்க வேண்டும்.
கருப்புச் சட்டை வைத்திருப்போர் அதை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். கருப்புப் பட்டை அணிந்தும்எதிர்ப்பைத் தெரிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே முதல் முறையாக பாமகவில் மட்டும்தான் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தைலாபுரம் தோட்டத்தில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.பயிற்சி பெற்ற நிர்வாகிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அரை மணி நேரம் தேர்வு நடைபெறும். இதற்கானமதிப்பெண்கள் 30. தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் தகுதி வாய்ந்த பேராசிரியர்களால் திருத்தப்பட்டுமதிப்பெண் போடப்படுகிறது.
பயிற்சி வகுப்புகளுக்கு தாமதமாக வரும் நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் நினைவூட்டு (அதாவது அபராதம்போல) கட்டணம் வசூலிக்கப்படும். இதுவரை ஆண்கள் 5000 பேரும், பெண்கள் 1000 பேரும் பயிற்சிபெற்றுள்ளனர் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications