லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது அதிமுக கடும் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தில் ஊழலைத் தடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்நினைத்தால் ஆளுங்கட்சி உயர் மட்டத் தலைவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக எம்.பிக்கள் கூறியுள்ளனர்.

தமிழக ஊழல் தடுப்புப் போலீஸார் பாரபட்சமாக செயல்படுகின்றனர்.ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில், எதிர்க்கட்சியினர் மீது குறிப்பாக அதிமுகதலைவர்களைக் குறி வைத்து உள்நோக்கத்துடன் ரெய்டுகள் நடத்துகின்றனர் என்றுகூறி டிஜிபி, ஊழல் தடுப்புப் போலீஸ் ஆகியோருக்கு அதிமுகவைச் சேர்ந்த 10ராஜ்யசபா எம்.பிக்களும் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் போலீஸார் மிகவும் பாரபட்சமாகநடக்கிறார்கள். ஆளும் திமுகவுக்கு ஆதரவாக நடக்கும் அவர்கள், அதிமுகவுக்குஎதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழல் தடுப்புப் போலீஸாரின் உண்மையான பணி என்னவென்றால், பொது வாழ்வில்ஊழலை அறவே ஒழிக்க அரசுக்கு உரிய அறிவுரைகளைக் கூறி நடவடிக்கை எடுக்கச்செய்வதுதான். ஆனால் அப்படி எதுவும் இப்போது நடப்பது போல தெரியவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுநடத்துவதிலேயே ஊழல் தடுப்புப் போலீஸார் குறியாக உள்ளனர். திமுகவுக்குஆதரவான நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சிகளை குறிப்பாக அதிமுகவை நசுக்குவதில் முனைப்புடன்செயல்படுகின்றனர். முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளைக் குறி வைத்துஅங்கு சோதனை நடத்துகிறார்கள்.

சன் டிவி கேமராவின் முன்னிலையில்தான் இந்த சோதனையே நடைபெறுகிறது. சன்டிவிக்குத்தான் இந்த செய்தியை ஒளிபரப்புவதிலும், படம் பிடிப்பதிலும்முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

உண்மையிலேயே ஊழலையும், முறைகேட்டையும் தடுக்கும் எண்ணம் ஊழல்தடுப்புப் பிரிவுக்கு இருந்தால், ஆளுங்கட்சியில் உள்ள, அதிகாரத்தில் உள்ள ஊழல்தலைகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையினர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு விவகாரத்திலிருந்து ஊழல்தடுப்புப் போலீஸார் தங்களது நடவடிக்கையைத் தொடங்கலாம். சாதாரணஇன்ஸ்பெக்டர் பதவி முதல் உயர் பதவி வரை இடமாற்றத்திற்கு எவ்வளவு பணம்பெறப்பட்டது என்பது குறித்து ஊழல் தடுப்புப் போலீஸார் விசாரிக்கலாம்.

முக்கியப் பதவிகளுக்கும், முக்கிய இடங்களுக்கும் இடமாற்றம் பதவி உயர்வுக்குஎவ்வளவு பணம் கைமாறியது, ஏலம் விடப்பட்டது, விற்கப்பட்டது என்பதை ஊழல்தடுப்புப் போலீஸார் விசாரிக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் (முதல்வர் கருணாநிதியின் குடும்பம்) மட்டும்ஏராளமான அதிகார மையங்கள் உள்ளன. அவர்கள் சொல்படிதான் இடமாற்றங்கள்,பதவி உயர்வுகள் உள்ளிட்டவை அதற்குத் தகுந்த விலைப்படி நடத்தப்பட்டுள்ளன.

இவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தாங்களாகவே முன் வந்து வழக்குப்பதிவு செய்திருக்கலாம். ஆனால் ஏன் அப்படிச் செய்யவில்லை. ஆளுங்கட்சியினர்மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் செய்த முறைகேடுகள், ஊழல்கள் குறித்துஎன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை டிஜிபியும், ஊழல் தடுப்புப் போலீஸ்அதிகாரிகளும் மக்களுக்கு விளக்க வேண்டும்.

முதல்வரின் செயலாளர்களாக இரண்டு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர். ஏன் தற்போது சர்வீஸில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைஅப்பொறுப்பில் நியமிக்கவில்லை?

கடந்த ஐந்து மாதங்களாக ஊழல் தடுப்புப் போலீஸார் செயல்படுவதைப்பார்க்கும்போது பாரபட்சமான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளது தெளிவாகவிளங்கும்.அரசுத் துறையில் நடைபெறும் ஒவ்வொரு இடமாற்றம், பதவி உயர்வும்,நியமனங்களும் பெரும் பணப் பரிமாற்றத்திற்குப் பிறகே நடைபெறுகின்றன.

பணம் கொடுத்தால்தான் அரசு காண்டிராக்டுகள் ஒதுக்கப்படுகின்றன.இவற்றையெல்லாம் ஊழல் தடுப்புப் பிரிவு தானாக முன் வந்து விசாரிக்காதது ஏன்?தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை மதுரையை தளமாகக் கொண்டு செயல்படும்ஒரு முக்கியப் புள்ளியின் (அழகிரி) கை காட்டலுக்குத்தான் அரசு இயந்திரம்செயல்படும் நிலை உள்ளது. தென் மாவட்ட அரசு இயந்திரத்தையே கட்டுப்படுத்தும்அதிகாரம் அவரிடம் உள்ளது.

மே 13ம் தேதி முதல் இன்று வரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் எத்தனைவழக்குகளை தாங்களே முன்வந்து தொடுத்து விசாரித்து வருகின்றனர் என்றவிவரத்தை வெளியிட முடியுமா.? அப்படி இல்லை என்றால் ஏன் என்பதை விளக்கவேண்டும்.

திமுக மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், குறிப்பாக பெண்கள்ஆகியோர் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு தொடர்பாக பெருமளவில் பணம்வாங்கியது தொடர்பாக ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைவிளக்க வேண்டும்.

தற்போது அமைச்சர்களாக உள்ள சிலர் மீது ஏற்கனவே ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குதொடர்ந்தது. அந்த வழக்குகளின் இன்றைய நிலை என்ன? அவர்கள் மீதானவிசாரணை முடிவடைந்து விட்டதா? குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டு விட்டதா?குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? அப்படி இல்லாவிட்டால் ஏன்செய்யவில்லை?

பெரும்பாலானவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டும் கூட இன்னும்தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. ஏன் இந்தத் தாமதம் என்பதை விளக்கவேண்டும்.

ஊழல் தடுப்புப் பிரிவு மக்கள் வரிப்பணத்திலிருந்து செயல்படும் ஒரு அமைப்பு.அந்த அமைப்பு முறையாக செயல்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளும் உரிமைஎம்.பிக்களான எங்களுக்கு உள்ளது.

இந்த விவகாரத்தை மத்திய உள்துறை, பொதுத்துறை, பொதுமக்கள் குறை தீர்ப்புமற்றும் ஓய்வூதியத் துறை ஆகியவற்றுக்கும் கொண்டு செல்லவுள்ளோம்.

மேலும் இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் புகார் அனுப்பத்திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அதிமுக எம்பிக்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+