தீவிரவாதிகளுக்கு உதவி-சென்னை நபர் கைது
சென்னை:கர்நாடக மாநிலம் மைசூரில் சமீபத்தில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தந்தசென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர்.
மைசூர் அருகே சமீபத்தில் கர்நாடக போலீஸார் பாகிஸ்தானைச் சேர்ந்த முகம்மது பர்ஹாத், முகம்மது உசைன்ஆகிய இரு தீவிரவாதிகளை கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சென்னையைச் சேர்ந்த முகம்மது கோயா என்ற தொழிலதிபர்தான்போலியான ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தந்து உதவினார் என்பது தெரிய வந்தது. கோயாவின் சொந்த ஊர் கேரளமாநிலம் கோழிக்கோடு ஆகும்.
கோயாவைத் தேடி கர்நாடக போலீஸார் சென்னை வந்தனர். ஆனால் அவர் கோழிக்கோட்டுக்குத் தப்பிச் சென்றதுதெரிய வந்தது. அங்கு மைசூர் போலீஸார் சென்று தலைமறைவாக இருந்த கோயாவைக் கைது செய்தனர்.
கோயா, முகம்மது பஹத்தின் உறவினர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னையில் வீட்டுஉபயோகப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள கோயா மைசூர் கொண்டுசெல்லப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.












Click it and Unblock the Notifications