சதாமுக்கு தூக்கு: டோனி பிளேர் எதிர்ப்பு
லண்டன்:இங்கிலாந்து மரண தண்டனையை எதிர்க்கும் நாடு. அத்தண்டனையை தடை செய்துள்ள நாடு. சதாம் உசேன்விவகாரத்திலும் எனது மற்றும் எனது நாட்டின் கருத்து இதுதான் என்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்கூறியுள்ளார்.
பேரழிவு ஆயுதங்களை சதாம் உசேன் குவித்து வைத்துள்ளார் என்று கூறி, ஈராக் மீது அமெரிக்காபடையெடுத்தபோது, அந்நாட்டுக்குத் துணையாக இருந்தது இங்கிலாந்து. தனது சார்பில் பெருமளவிலானபடைகளையும் ஈராக்குக்கு அனுப்பி வைத்தது.
சதாம் உசேன் பதுங்கு குழியில் இருந்ததை கண்டுபிடித்து அவரை பிடித்ததும் இங்கிலாந்து வீரர்கள்தான். இந்தநிலையில் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து பிரதமர் பிளேர் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கிலாந்தில் மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.
உலக நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறோம். யாரையும் தூக்கிலிட்டுக்கொள்ளக் கூடாது என்பதே எங்களது கருத்து. யாராக இருந்தாலும், சதாம் உசேனாகவே இருந்தாலும் கூடதூக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் எனது மற்றும் எனது நாட்டின் கருத்து என்று கூறியுள்ளார் பிளேர்.
அதே சமயம், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மார்க்கரெட் பெக்கட் சதாமுக்கு விதிக்கப்பட்டுள்ளதண்டனையை வரவேற்றுள்ளார். சதாம் செய்த தவறுக்குக் கிடைத்துள்ள சரியான தண்டனை இது என்று அவர்கருத்து தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications