ஆட்டம்: தொடரும் வேட்டை-சிக்கிய ஜோடிகள்
சென்னை:நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவைத் தாண்டி நடைபெறும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களை தொடர்ந்துபோலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த சில நாட்களாக நள்ளிரவைத் தாண்டி நடைபெறும்கச்சேரிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து பலரையும் கைது செய்து வருகின்றன.
மது அருந்தியபடி ஜோடி ஜோடியாக ஆடுவோரைப் பிடித்து கடுமையாக எச்சரிக்கின்றனர். நள்ளிரவுக்கு மேல்விதிமுறைகளை மீறி பார்களை நடத்தும ஹோட்டல்களின் மேலாளர்கள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிரடி சோதனையில் ஏராளமான பெண் சாப்ட்வேர் என்ஜீனியர்கள், கால்சென்டர் பெண் ஊழியர்கள் போலீஸாரிடம் சிக்கினர். கடும் வாக்குவாதத்திற்குப் பின்னர் அவர்களை போலீஸார்விடுவித்தனர்.
இந்த நிலையில் போலீஸஸ் நடவடிக்கை தொடர்கிறது. நேற்று வடபழனி 100 அடி சாலையில் உள்ள அம்பிகாஎம்பயர் என்ற ஹோட்டலில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
நள்ளிரவுக்கு மேல் புகுந்த போலீஸார் அங்கு ஜோடி ஜோடியாக மது அருந்தி ஆடிக் கொண்டிருந்தவர்களைதடுத்து ஆட்டத்தை நிறுத்தினர். 10க்கும் மேற்பட்ட ஜோடிகளை போலீஸார் பிடித்தனர். இவர்களில் 3 பேர் காதல்ஜோடிகள். அதில் ஒரு ஜோடி கள்ளக் காதல் ஜோடி என விசாரணையில் தெரிய வந்தது.
இந்தக் கள்ளக் காதல் ஜோடி இருவரும் கல்யாணமாகி குழந்தைகளைப் பெற்றவர்கள். ஒரே அலுவலகத்தில்வேலை பார்க்கிறார்களாம். இரவுப் பணி என்று தங்களது வீட்டில் கூறி விட்டு இங்கே ஹோட்டலில் வந்து ஆட்டம்போட்டுள்ளனர். இவ்வாறு அடிக்கடி இரவுப் பணிக்கு செல்வது இவர்களது வழக்கம் என்றும் போலீஸாரிடம்அவர்கள் தெரிவித்தனர்.
பிடிபட்ட காதல் மற்றும் கள்ளக் காதல் ஜோடிகளை போலீஸார் வீடியோவில் படம் எடுக்க முயன்றபோதுபோலீஸாரின் காலில் விழாத குறையாக அவர்கள் விட்டுவிடுமாறு கெஞ்சினர். இதையடுத்து கடுமையாகஎச்சரித்த போலீஸார் அவர்களை விடுவித்தனர்.
ஜோடிகளை மகிழ்விக்க ஆடிய 2 பார் நடன அழகிகளையும் போலீஸார் விட்டு விட்டனர். ஆனால் நள்ளிரவைத்தாண்டி பார் நடத்தியதற்காக ஹோட்டல் மேலாளர் வித்யாதரன் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர்.தொடர்ந்து இதுபோல விதிமுறைகளை மீறி நள்ளிரவுக்கு மேல் மது விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும்ஹோட்டல்களில் சோதனை தொடரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கிழக்குக் கடற்கரை சாலைப் பக்கம் தீவிரப்படுத்தினால் லாரி லாரியாக ஆட்களை அள்ளிச்செல்ல முடியும் என்பது சென்னை நகர மக்களின் கருத்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications