திமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் எச்சரிக்கை மணி
மதுரை:சென்னை மாநகராட்சித் தேர்தலில் ரெளடிகள் மூலம் ஜனநாயக படுகொலை நடத்தியதிமுக, அரசுக்கு எதிரான எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறையை கண்டித்து மதுரை தபால்தந்திஅலுவலகம் முன் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் வரதராஜன்பேசுகையில்,
சென்னை மாநகராட்சி தேர்தலில் பெரும் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது.அங்கு ஜனநாயகத்திற்கு புறம்பான கொடுமையான செயல்கள் நடந்ததை திமுகதலைமைக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
தேர்தலின்போது "தொழில் முறை ரெளடிகள் கார்களில் ஒவ்வொரு பூத்தாக சென்றுஅதிகாரிகளை மிரட்டி வெளியேற்றினர். ரவுடிகளே ஓட்டுக்களை போடுகின்றனர்.ரெளடிகள் சென்ற பிறகு பூத்களுக்கு வந்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர் போலீசார்.
மதுரை உட்பட சில இடங்களில் ஆளுங்கட்சியினருக்கும், எதிர்கட்சியினருக்கும்அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால்சென்னையில் நடந்தது திமுகவின் திட்டமிட்ட ஜனநாயக படுகொலை.
அராஜக அதிமுக, ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற உறுதியுடன் தான் திமுககூட்டணியில் சேர்ந்தோம். மக்களவை தேர்தல், சட்டசபைத் தேர்தலில் சர்வாதிகாரமா?ஜனநாயகமா? என்பதை முன் வைத்து பிரசாரம் செய்தோம். இதனால் அதிமுக அரசுஅகற்றப்பட்டது.
இன்று திமுக அரசு சில தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது. அதைவரவேற்கிறோம். அதே நேரத்தில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த ஜனநாயகபடுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் திமுக அரசுக்கான எச்சரிக்கை மணி. இந்த அரசுக்குஏற்பட்டுள்ள கரும்புள்ளியை திமுக, துடைக்க முயற்சிக்க வேண்டும். சென்னையில்வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள், திமுக, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியினர் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட வார்டுகளில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்என்றார் வரதராஜன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications