தலித் பஞ். தலைவர்களுக்கு பாராட்டு விழா
சென்னை:பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித்பஞ்சாயத்துக்களின் தலைவர்கள் மற்றும் அந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊர் மக்கள் ஆகியோருக்கு வருகிற 13ம்தேதி சென்னையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
மேற்கண்ட நான்கு பஞ்சாயத்துக்களிலும் குறிப்பிட்ட ஜாதியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக பல ஆண்டுகளாகதலைவர் தேர்தலை நடத்த முடியாமல் இருந்து வந்தது. அங்கு யாராவது போட்டியிட்டாலும் கூட குறிப்பிட்டஜாதியினரின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் காரணமாக அவர்கள் போட்டியிலிருந்து விலகி விடுவார்கள் அல்லதுவெற்றி பெற்றால் உடனேயே ராஜினாமா செய்து விடுவார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நான்கு தலித் பஞ்சாயத்துக்களின் தலைவர்பதவிக்கும் தேர்தல் நடந்தது. இதில் நான்கு பஞ்சாயத்துக்களுக்கும் புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுபதவியேற்பும் முடிந்துள்ளது.
பல ஆண்டுகளாக செயல்படாமல் கிடந்த இந்த பஞ்சாயத்துக்களுக்கு உயிர் கொடுத்துள்ள நான்குபஞ்சாயத்துக்களின் தலைவர்களுக்கும், இதற்குக் காரணமாக அமைந்த ஊர் மக்களுக்கும் பாராட்டு விழா நடத்ததமிழக அரசு முடிவு செய்தது.
இந்த விழாவுக்கு சமத்துவப் பெருவிழா என முதல்வர் கருணாநிதி பெயரிட்டுள்ளார். இந்தப் பாராட்டு விழாவருகிற 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். உள்ளாட்சித் துறை தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலைவகிக்கிறார். காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன்,இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவர்கள் தவிர தி.க. பொதுச் செயலாளர் கி.வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் சிறப்புஆற்றுகின்றனர். நான்கு கிராம மக்களும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக அரசு போக்குவரத்து, தங்கும் வசதிஉள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications