டெல்லியில் மீண்டும் கடையடைப்பு-பதட்டம்
டெல்லி:டெல்லியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள 44,000 கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்குமாறுஉச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி வணிகர்கள் இன்று முதல் 24 மணிநேர கடையடைப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
டெல்லியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வணிக நிறுவனங்களை மூட டெல்லி அரசு நடவடிக்கைஎடுத்தது. இதை எதிர்த்து வணிகர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் குடியிருப்புகள் உள்ள பகுதியில் வணிக நிறுவனங்கள் இருக்க கூடாது.அப்படி உள்ள வணிக நிறுவனங்களை மூடி சீல் வைக்கும் டெல்லி அரசின் நடவடிக்கை சரியானதே என்று கூறிவணிகர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து டெல்லி அரசு மீண்டும் சீல் வைக்கும் நடவடிக்கையை தொடங்கியது. இதை எதிர்த்து 3 நாள்கடையடைப்புப் போராட்டத்தை வணிகர்கள் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து 5 பேர்பலியானார்கள். பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
இதைத் தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்படும் எனடெல்லி அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், டெல்லியில்குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள 44,000 கடைகளையும் மூடி சீல் வைக்க வேண்டும். உடனடியாக இதைச்செய்ய வேண்டும் என நேற்று அதிரடிாயக உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று இரவு முதல் கடைகளுக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கையில் டெல்லி அரசு இறங்கியது.இது வணிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் 24 மணி நேர பந்த் நடத்தஅவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இன்று காலை முதல் பந்த் தொடங்கியுள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் பள்ளிக் கூடங்களுக்கு டெல்லி அரசு விடுமுறைஅறிவித்துள்ளது. நகர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண உதவுமாறு கோரி பிரதமரை சந்தித்து முறையிடகாங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications