இடிய ஆரம்பித்தது சென்னை சில்க்ஸ்
சென்னை:சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெறாத தளங்களை இடிக்கும் பணி இன்று மீண்டும் முழு வீச்சில்தொடங்கியது.
சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் 5, 6மற்றும் 7வது தளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அந்த்தளங்களை இடித்துத் தள்ள முடிவு செய்தது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சென்னை சில்க்ஸ் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த மனுவைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் அப்பீல்மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தளங்களை இடித்துத் தள்ளஉத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 3 தளங்களையும் இடிக்கும் பணிதொடங்கியது. ஆனால் இடையில் தீபாவளி மற்றும் தொடர் மழை குறுக்கிட்டதால் இடிக்கும் பணி தற்காலிகமாகநிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் இடிக்கும் பணி தொடங்கியது. முன்னதாக 3 தளங்களையும் இணைக்கும்தூண்களை கீழ் தளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் எப்படி இடிப்பது என்பது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications