அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம்-ஜெ
சென்னை:மீனவர்கள் நலன் குறித்து கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் செயல்படும் திமுகஅரசைக் கண்டித்து வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும்நாகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாகப்பட்டனத்திலிருந்து 150 மீனவர்கள் சமீபத்தில் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர். வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளது குறித்து அவர்களுக்கு அரசு சரிவரதெரிவித்து எச்சரிக்கை செய்யாததால், மீனவர்கள் 150 பேரும் கடலுக்குள் சென்றுமோசமான நிலையில் சிக்கினர்.
அவர்களில் சிலர் இறந்து விட்டனர். பலரைக் காணவில்லை. சிலர் சிரமப்பட்டுகரைக்கு வந்து சேர்ந்தனர். இப்போது படுகாயத்துடனும், உடல் வேதனையுடனும்மருத்துவமனைகளில் போராடி வருகின்றனர்.
இதேபோல சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்று, புயலில் சிக்கி இன்னும் கரை சேரவில்லை. அரசின் அலட்சியத்தால்தான் இதுநடந்துள்ளது.
அவர்கள் சென்ற படகு பூம்புகார் அருகே சேதமடைந்த நிலையில் கரைஒதுங்கியுள்ளது. காணாமல் போன மீனவர்கள் இறந்திருக்கலாம் என அரசு கூறுகிறது.காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையையும்அரசு எடுக்கவில்லை. மத்திய அரசின் உதவியைக் கோரவில்லை.
அரசு இயந்திரம் செயலிழந்து போயுள்ளதையும், அரசின் நிர்வாகத்திறமையின்மையையுமே இது காட்டுகிறது. மீனவர்கள் நலன் குறித்த அரசின்அலட்சியப் போக்கைக் கண்டித்து அதிமுக மீனவர் அணி சார்பில் 9ம் தேதிசென்னையிலும், 10ம் தேதி நாகையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications