ராமோஜி ராவ் மீது எம்பி பரபரப்பு புகார்
டெல்லி:ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பத்திரிக்கை அதிபருமான ராமோஜி ராவ் நடத்தி வரும் நிதிநிறுவனம் பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் புகார்கொடுத்துள்ளதால் ஆந்திராவில் பரபரப்பு எழுந்துள்ளது.
ராஜந்திரியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருணாகுமார் வந்தவள்ளி என்பவர் மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரத்தை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.
இதுகுறித்து அருணாகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமோஜி ராவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில்பிரமாண்ட திரைப்பட ஸ்டுடியோ உள்ளது. ஈநாடு உள்ளிட்ட பத்திரிகைகளை அவர் நடத்தி வருகிறார். அவருக்குசொந்தமாக மார்கதரிசி சிட் பண்ட் என்ற நிதி நிறுவனம் உள்ளது.
இந்த நிதி நிறுவனத்தில் ரிசர்வ் வங்கிகளின் விதிமுறைகளுக்கு முரணாக முதலீட்டாளர்களிடமிருந்து டெபாசிட்தொகை பெறப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கும் குறைவாகத்தான் லாபம்கிடைக்கிறது. ஆனால் ஆண்டுக்கு ரூ. 200 கோடி வரை டெபாசிட் பெறப்படுகிறது.
இப்படி அதிக அளவில் முதலீடுகளை பெற்றால் எப்படி முதலீட்டாளர்களுக்கு அசல் மற்றும் வட்டித் தொகையைமீண்டும் எப்படித் திருப்பித் தர முடியும்? எனவே இந்த நிறுவனத்தில் நிதி முறைகேடு நடப்பதாக சந்தேகம்வருகிறது.
எனவே இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்என்றார் அருணாகுமார்.
இவரது இந்த குற்றச்சாட்டால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்கதரிசி சிட்பண்ட் நிறுவனத்தில்முதலீடு செய்துள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இன்று ஆந்திரா முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின்கிளைகளை முற்றுகையிட்டு தாங்கள் டெபாசிட் செய்துள்ள தொகையை திருப்பித் தருமாறு வலியுறுத்திவருகின்றனர்.


Click it and Unblock the Notifications
