பெட்ரோல், டீசல் விலை குறையலாம்?
டெல்லி:பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
சர்வதேச மார்க்கெட்டில் தற்போது கச்சா எண்ணையின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் கடுமையாகஉயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசு வாய் திறக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இக்கோரிக்கை குறித்துமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச சந்தையில்கச்சா எண்ணையின் விலை குறைந்திருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து முதலில் ஆராயவேண்டும்.
விலை குறைவு நமக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில்பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து, பரிசீலித்து வருகிறது என்றார்தியோரா.
கச்சா எண்ணை விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடுத்தடுத்து மத்திய அரசு முன்புஉயர்த்தியது. இப்போது, கச்சா எண்ணையின் விலை குறைந்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்கவேண்டும் என்று மக்கள் மத்தியில் எண்ணம் எழுந்துள்ளது. எனவே இக்கோரிக்கையை மத்திய அரசுபுறந்தள்ளாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications