அதிமுகவிலிருந்து விலகினார் சரத்குமார்
சென்னை:அதிமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் இனி அரசியலில் ஈடுபடாமல்தொடர்ந்து திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து விலகி தடாலடியாக அதிமுகவில் இணைந்தார் நடிகர்சரத்குமார். ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.அவருடன் மனைவி ராதிகாவும் வந்திருந்தார். அப்போது அதிமுக உறுப்பினர் கார்டை இருவருக்கும் கொடுத்தார்ஜெயலலிதா.
அதிமுகவில் இணைந்த பின்னர் சட்டசபைத் தேர்தலில் படு தீவிரமாக பிரசாரம் செய்தார் சரத். ஆனால் ராதிகாஅதிமுகவின் காற்று கூட தனது பக்கம் அடிக்காமல் படு ஜாக்கிரதையாக இருந்தார். இதனால் கடுப்பானஜெயலலிதா சமீபத்தில் ராதிகாவை அதிமுகவை விட்டு நீக்குவதாக அறிவித்தார். நான் அதிமுகவில் சேரவேஇல்லை. அப்படி இருக்கையில் என்னை எப்படி நீக்க முடியும் என வியப்படைந்தார் ராதிகா.
ராதிகாவின் நீக்கத்தைத் தொடர்ந்து சரத்குமார் விரைவில் ஒரு முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.தற்போது அந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்வதாக ஜெயலலிதாவுக்குஅவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேக்ஸ் மூலம் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், சில விரும்பத்தாகத நிகழ்வுகள் காரணமாக எனதுஅரசியல் வாழ்க்கையில், கடினமான, மனதுக்கு வேதனை அளிக்கக் கூடிய முடிவுகளை நான் எடுக்கநேர்ந்துள்ளது.
எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகப் பெருமக்களும், தமிழக மக்களுமே சினிமாவில் நான்இன்றிருக்கும் நிலையை எட்டுவதற்குக் காரணமானவர்கள். எனது சினிமா தொழிலை தொடரும் அதேவேளையில், சமுதாய நலன் மற்றும் மேம்பாட்டுக்காக பங்காற்ற விரும்பினேன்.
வறுமை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றின் பிடியிலிருந்து தமிழகத்தைக் காக்கவும், மாநிலத்தில் சமூகஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் நான் எனது ரசிகர்களிடம் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
அரசியல் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் நான் மேற்கொண்ட முடிவுகள் எப்போதும் சுயமாக சிந்தித்துஎடுக்கப்பட்டவையே ஆகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிவேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிரப் பிரசாரத்தில்ஈடுபட்டேன்.
கட்சியில் எனக்கு அளிக்கப்பட்ட பணிகளை விருப்பத்துடன் ஏற்று திருப்திகரமாக செய்து முடித்திருக்கிறேன்.தற்போது நான் சார்ந்திருக்கும் தொழிலில் வேலைப்பளு அதிகரித்துள்ளது. அத்துடன் நான் தலைவராக பொறுப்புவகிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.
இதுபோன்றதொரு சூழ்நிலையில், அதிமுக தலைமையிடத்திற்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்.எனது தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் பல உயர்வுகளைப் பெற்று சினிமா தொழிலில் மட்டுமின்றிதமிழ்நாடு மக்களுக்காகவும் சமுதாயத்துக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
திமுகவிலிருந்து அதிமுகவுக்குத் தாவி தற்போது அங்கிருந்தும் வெளியேறி விட்ட சரத்குமார் தற்போதைக்குஅரசியலில் ஈடுபட மாட்டார் என்று உறுதியாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications