துணை நகரம்-வயல்களை மடக்க அரசு திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே திருமழிசை பகுதியைச் சுற்றிலும் உள்ள 9 கிராமங்களில் உள்ள விளை நிலங்களைக்கையகப்படுத்தி அங்கு துணை நகரம் அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதற்கு அந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் பெருகி வரும் மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னைக்கு அருகே துணை நகரங்கள்அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. வண்டலூர் அருகே பல ஆயிரம் ஏக்கர் நிலங்களைகையகப்படுத்தி துணை நகரம் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது.

இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்போரும் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். அரசு தனது முயற்சியை கைவிடாவிட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாமகநிறுவனர் ராமதாஸ் எச்சரித்தார். இதையடுத்து அத்திட்டத்தை வாபஸ் பெற்றது திமுக அரசு.

இந்த நிலையில் மறுபடியும் துணை நகரம் திட்டத்தை தூசு தட்டி எடுத்துள்ளது தமிழக அரசு. சென்னை அருகேஉள்ள திருமழிசை பகுதியில் துணை நகரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருமழியைச் சுற்றிலும்உள்ள 9 கிராமங்களில் உள்ள விளைநிலம் உள்ளிட்ட நிலங்களைக் கையகபபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 1999ம் ஆண்டு இதே பகுதியில் துணை நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.ஆனால் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில்உள்ளது.

இந்த நிலையில் மறுபடியும் அதே பகுதியில் துணை நகரம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதுஅப்பகுதி மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

திருமழிசை அருகே உள்ள மேட்டுத்தாங்கல், குத்தம்பாக்கம், பர்வதராஜபுரம், உட்கோட்டை, இருளப்பாளையம்,நெடுஞ்சேரி, வெள்ளவேடு, செம்பரம்பாக்கம் ஆகிய 9 கிராமங்களில்தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக விவசாயிகள் வசம் உள்ள வயல்களை அதிகாரிகள் கையகப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். அரசின் இந்தப்போக்கால் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து போகும் என அவர்கள் குறியுள்ளனர். அரசின்திட்டத்தை எதிர்த்து போராட்டதில் குதிக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தங்களது நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை அரசு 15 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால்பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரி சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாகும். இந்த ஏரிக்கு,குத்தம்பாக்கம் பகுதியைச் சுற்றிலும் உள்ள நீர் நிலைகளிலிருந்துதான் தண்ணீர் அதிக அளவில் வருகிறது.இப்படிப்பட்ட இடத்தை காண்க்ரீட் காடாக மாற்றினால் எதிர்காலத்தில் பெரும் குடிநீர்ப் பிரச்சினையும், வெள்ளஅபாயம் ஏற்படும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+