மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம்- வைகை அணை திறப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் கோவை, ஈரோடு மற்றும் தென் மாவட்டங்கள் அதிக அளவில்சேதத்தை சந்தித்துள்ளன.

கோவை, மதுரையில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை சூலூர், அவினாசி,பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பல பகுதிகளி வெள்ளக்காடாகியுள்ளன.

தொண்டாமுத்தூர் அருகே கோழிப் பண்ணை ஒன்று நீரில் மூழ்கியது. இதில் 2,000 கோழிகள் நீரில் மூழ்கிபலியாயின. ஈரோட்டில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட குடிசைகள் நீரில்மூழ்கிவிட்டன.

மதுரையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்துக்குள்ளும் நீர்புகுந்துள்ளது.

வைகை அணை திறப்பு:

இதற்கிடையே வைகை அணை இன்று காலை திறக்கப்பட்டது. 3ம் நிலை வெள்ள அபாயஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக வைகை அணை வேகமாக நிரம்பத்தொடங்கியது. நேற்று பிற்பகலில் அணையின் நீர் மட்டம் 68.27 அடியாக இருந்தது.மொத்த நீர் இருப்பு 71 அடியாகும். இந் நிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. இதையடுத்து 3வது வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. தொடர்ந்து அணை திறக்கப்பட்டது.

அணையிலிருந்து வினாடிக்கு 4,055 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேஅளவிலான தண்ணீர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து நீர்திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குசெல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையிலிருந்து மேலும் அதிக அளவிலான நீர்திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு:

இதேபோல இன்னொரு முக்கிய அணையான முல்லைப் பெரியாறு அணைக்கும்நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று134.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,435 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1918 கன அடி நீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் ஸ்திரத்தன்மையை பொறியாளர்கள்தொடர்ந்து கண்காணித்தவண்ணம் உள்ளனர்.

இதேபோல விழுப்புரம் மாவட்டம் மணித்தா அணையும் நிரம்பி வருகிறது. தற்போது32 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த கொள்ளளவு 36 அடியாகும்.

பவானி சாகர், பாபநாசம் அணை:

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை நிரம்பியுள்ளது. இந்த அணையும்திறக்கப்படவுள்ளது.

அதேபோல 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் இருப்பு 128அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து இருப்பதால் அணை வேகமாகநிரம்பி வருகிறது. மணித்தாறு அணையும் வேகமாக நரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் 89 அடியாக உள்ளது. மொத்தக் கொள்ளளவு 118 அடியாகும்.

குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்1, சிற்றார் 2 ஆகியஅணைகள் நிரம்பியுள்ளன. மாநிலம் முழுவதும் மழை நீடிப்பதால் அணைகள்அனைத்தும் நிரம்பி வருகின்றன. இதனால் பல மாவட்டங்களில் வெள்ள அபாயஎச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வெள்ள அபாயசூழ்நலைய சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+