சதாமுக்கு அடுத்த மாதம் தூக்கு?
பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாதில் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஈராக்கில் அவரதுஆதரவாளர்களும், சன்னி பிரிவினரும், வரவேற்று ஷியா பிரிவினரும் கடும்வன்முறையில் குதித்துள்ளனர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் மோதல்கள் நடந்துவருகின்றன.
இந் நிலையில் பாக்தாத் நகருக்கு அருகே உள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம்வசிக்கும் கிரேயத் மாவட்டத்தில் உணவு விடுதி ஒன்றில் புகுந்த மனித வெடிகுண்டுநபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில் 17 பேர்உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதேபோல அகமதியா மாவட்டத்தில் (இங்கு சன்னி பிரிவினர் அதிகம்) பெரும்கலவரம் மூண்டது. பாதுகாப்புப் படையினருக்கும் சதாம் ஆதரவாளர்களுக்கும்இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறந்தனர்.26 பேர் காயமடைந்தனர்.
அடுத்த மாதம் தூக்கு?:
இதற்கிடையே, அடுத்த மாதம் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனைநிறைவேற்றப்படும் என ஈராக் பிரதமர் நூரி மாலிகி கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
ஈராக் சட்டப்படி ஒருவர் மீது பல வழக்குகள் இருந்தாலும், ஒரு வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டால் மற்ற வழக்குகளுக்காக காத்திருக்காமல் தண்டனையைநிறைவேற்றலாம்.
தற்போது சதாம் மீதான தூக்குத் தண்டனை குறித்த தீர்ப்பு மேல் முறையீட்டுக்குச்சென்றுள்ளது. அது அனேகமாக 20 நாட்களுக்குள் முடிந்து விடும். அப்படிமுடிந்தவுடன், அதாவது அடுத்த மாதத்திற்குள் சதாமை தூக்கிலிட திட்டமிட்டுள்ளோம்.
யார் வற்புறுத்தினாலும் தீர்ப்பில் மாற்றம் இருக்காது. ஈராக்கின் நீதி அமைப்பை மற்றநாடுகள் மதிக்க வேண்டும் என்றார் மாலிகி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications