இலங்கை-தமிழ் அமைச்சர் தொண்டைமான் விலகல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளைஞர் நலம் மற்றும் சமூகபொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் தனதுஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் கட்சி இலங்கைதொழிலாளர் காங்கிரஸ். இக்கட்சியின் தலைவரான தொண்டைமான் இலங்கைஅமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறைஅமைச்சராக இருந்தார். இப்பதவிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் தொண்டைமான்தேர்வானார்.

தற்போது தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்துஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் யோகராஜன்கூறுகையில், எங்களது தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் தனது ராஜினாமாகடிதத்தை அதிபர் ராஜபக்ஷேவுக்கு அனுப்பி விட்டார்.

ராஜினாமாவுக்கான காரணத்தை கூற முடியாது. அமைச்சர் பதவியிலிருந்துதான்தொண்டைமான் விலகியுள்ளார். அடுத்து என்ன நடவடிக்கையை அவர் எடுப்பார்என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார் யோகராஜன்.

தொண்டைமான் கட்சியின் சார்பில் 2 எம்.பிக்கள் துணை அமைச்சர்களாக உள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தொண்டைமான் அனுப்பிய ராஜினாமா கடிதம் இன்னும் அதிபருக்குவந்து சேரவில்லை என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் சந்திரபாலா லியநாயகேதெரிவித்துள்ளார்.

தொண்டைமான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் கூட அவரதுகட்சி, ராஜபக்ஷே அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறாது என்றுகூறப்படுகிறது.

புலிகளை அழிப்பேன்: ராஜபக்ஷே

இதற்கிடையே கொழும்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ராஜபக்ஷே பேசுகையில்,அமைதி பேச்சவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதுவரை உள்ளஅரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் செய்யும் எண்ணமும் இல்லை.

எங்களது ஒரே லட்சியம் விடுதலைப் புலிகளை அழிப்பதுதான். அது நடைபெறும்வரை ஓய மாட்டோம். எந்தச் சூழ்நிலையிலும் ராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்தமாட்டோம் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழர் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் வெறித்தாக்குதல் தொடரும் எனத் தெரிகிறது. இது தமிழர்களிடையே பெரும் அச்சத்தைஏற்படுத்தியுள்ளது. அதிபரின் பேச்சுக்கு விடுதலைப் புலிகள் தரப்பு பதிலடிகொடுக்கும் என்பதால் மிகப் பெரிய போர் விரைவில் வெடிக்கக் கூடும் என்றும்அஞ்சப்படுகிறது.

3 நாட்கள் தீவில் தத்தளித்த 20 அகதிகள்

இந் நிலையில் ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் தீவில் இறக்கி விடப்பட்டு 3நாட்களாக தத்தளித்து வந்த 20 இலங்கை அகதிகளை தமிழக மீனவர்கள் மீட்டுகரைக்கு கொண்டு வந்தனர்.

இலங்கையிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 20 அகதிகள்ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் வந்தனர். ஆனால் இவர்களை அழைத்து வந்தபடகோட்டி, ஆதாம் தீவு என்ற தீவில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.

நடுக் கடலில் ஆளில்லாத அந்தத் தீவில் கடந்த 3 நாட்களாக 20 பேரும் பரிதவித்துவந்தனர். குடிக்கக் கூட தண்ணீர் இல்லாததால் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் இவர்களைப் பார்த்து அங்குசென்று அனைவரையும் தங்களது படகுகளில் ஏற்றி ராமேஸ்வரம் கொண்டு வந்தனர்.

பின்னர் அனைவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணைநடத்திய போலீஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+