யுஎஸ் தேர்தல்: புஷ்ஷை வாரிவிட்ட இராக்
சிகாகோ:அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும், மகாண ஆளுநர் பதவிகளுக்கும் நடந்த தேர்தலில்அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.பெரும்பாலான மாகாண ஆளுநர் பதவிகளையும், எம்.பி பதவிகளையும் ஜனநாயகக்கட்சி வென்றுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் சபைக்கும் (ஹவுஸ் ஆப்ரெப்ரெசன்டேடிவ்ஸ்-பிரதிநிதிகள் சபை), செனட் சபைக்கும், ஆளுநர் பதவிகளுக்கும்நேற்று தேர்தல் நடந்தது.
அதிபர் பதவிக்கு 4 வருடத்துக்கு ஒரு முறை நேரடித் தேர்தல் நடக்கும். இந்தத் தேர்தல்முடிந்து 2 வருடத்தில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்குதேர்தல் நடக்கும்.
அதே போல செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 33 இடங்களுக்கும் இதேநேரத்தில் தேர்தல் நடக்கும். மேலும் மாகாண ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல்கள்இதே நேரத்தில் நடக்கும்.
இந்தத் தேர்தல்கள் தான் இப்போது அமெரிக்காவில் நடந்தன. இந்த தேர்தல்களில்பதிவான வாக்குகளை எண்ணும் பணி இந்திய நேரப்படி நேற்று இரவு தொடங்கியது.இதில் ஆரம்பத்திலிருந்தே எதிர்க் கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றிக் கொடி நாட்டிவருகிறது.
நாடாளுமன்ற காங்கிரஸ் சபை, செனட் சபை மற்றும் பெரும்பாலான மாகாணஆளுநர் பதவிகளை ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.
நியூயார்க், ஒஹையோ, மேரலாண்ட், மாசசூசட்ஸ், ஆர்கன்சாஸ் ஆகிய மாநிலஆளுநர் பதவிகளையும் ஜனநாயகக் கட்சியே பிடித்துள்ளது.
புளோரிடா, டெக்ஸாஸ் (புஷ்ஷின் சொந்த ஊர்) மாகாணங்களை புஷ்சின் குடியரசுக்கட்சி வென்றுள்ளது.
மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 26 மாநிலங்களை ஜனநாயகக் கட்சி பிடிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதை விட கூடுதலாகத்தான் கிடைக்கும் என அக்கட்சியின்செய்தித் தொடர்பாளர் பிரையன் நேமி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் செனட் சபையிலும், காங்கிரஸ் சபையிலும் பெரும்பாலானஇடங்களை எதிர்க் கட்சி பிடித்திருப்பதால் அதிபர் புஷ்சுக்கு அடுத்த 2 வருடமும்பெரும் தலைவலி காத்திருக்கிறது. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்கமுடியாத, அமல்படுத்த நிலைக்கு புஷ் அரசு தள்ளப்படும்.
மேலும் ஆளுநர் பதவிகளையும் ஜனநாயகக் கட்சி பிடிப்பதால் மாகாணங்களின்நிர்வாகமும் புஷ் கட்சியின் கையை விேட்டுச் செல்கிறது. முக்கிய முடிவுகளைஎடுப்பதில் ஆளுநர்கள் மிகவும் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிமேல் புஷ் நினைத்தபடியெல்லாம் அரசை நடத்திவிட முடியாத சூழல்உருவாகியுள்ளது.
கடந்த 1994ம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி வசம் காங்கிரஸ் வருகிறது.இதேபோல செனட் சபையையும் ஜனநாயகக் கட்சியே பிடிக்கும் நிலைஉருவாகியுள்ளது.
ஹில்லாரி கிளிண்டன், ஆர்னால்டு வெற்றி:
இந் நிலையில் செனட் தேர்தலில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், அடுத்த அமெரிக்க அதிபர் என்று வர்ணிக்கப்படுபவருமான ஹில்லாரிகிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல கலிபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் தற்போதைய ஆளுநரும், ஹாலிவுட் நடிகருமான ஆர்னால்டுஸ்வார்சனீகர் மீண்டும் வெற்றி பெற்றார்.
நியூயார்க்கிலிருந்து 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹில்லாரி கிளிண்டன். 2008ம் ஆண்டு நடைபெறும் அதிபர்தேர்தலில் ஹில்லாரி தான் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில் தற்போதைய வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்பைஅதிகரித்துள்ளது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஸ்பென்சரை விட 30 சதவீதம் கூடுதல் புள்ளிகளைப் பெற்று வென்றார் ஹில்லாரி. ஹில்லாரிக்குஎதிராக குடியரசுக் கட்சி சார்பில் தீவிர பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் அதையும் மீறி அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.
இதேபோல கலிபோர்னியா மாநில ஆளுநராக குடியரசுக் கட்சியின் ஆர்னால்டு ஸ்வர்சனீகர் மீண்டும் வெற்றி பெற்றார். இந்தியரான பாபி ஜிந்தாலும்செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புஷ் பேரதிர்ச்சி:ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சிக்கு கிடைத்துள்ள பெரும் தோல்வியால் அதிபர் புஷ் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்று இரவு அவர் செய்தியாளர்கள்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி ஸ்னோ கூறுகையில், தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது ஜனநாயகக் கட்சி செனட் மற்றும்காங்கிரஸ் சபையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதிபரின் செயல்களை குறை கூறவே அதிக நேரத்தைஎடுத்துக் கொண்டனர் ஜனநாயகக் கட்சியினர். அது அவர்களுக்கு சாதகமாகியுள்ளது என்றார்.
புஷ்ஷின் ஈராக் கொள்கைதான் அவரை காலை வாரி விட்டதாக பெரும்பான்மையாக கருத்து நிலவுகிறது. இருப்பினும் குடியரசுக் கட்சியினர் இதை ஏற்கமறுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications