ஜெ வீடு: கத்தி நபர் நுழைந்தது எப்படி?-பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை. அதி தீவிர பாதுகாப்பில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் கத்தியோடு ஒருவர் நுழைய முடிந்தது எப்படி என பாஜக தலைவர்இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் அப்பாவித் தமிழர்களும், குழந்தைகளும் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு வருவதைத்தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்.

பள்ளிகள், அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி குழந்தைகளையும் அப்பாவிகளையும் இலங்கை ராணுவம்கொன்று வருகிறது. இந்த விஷயத்தில் இந்தியா அமைதி காப்பது சரியல்ல. இந்தியா வரும் இலங்கை அதிபர்ராஜபக்ஷேவிடம் மத்திய அரசு திட்டவட்டமாக பேச வேண்டும்.

இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்களும், தீவிரவாதிகளின் ஆயுதத் தயாரிப்பும் அதிகரித்துவிட்டது. இதைத்தடுக்க மீண்டும் பொடாவை, எந்தப் பெயரிலாவது, கொண்டு வர வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை. மிக தீவிர பாதுகாப்பில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவின் வீட்டுக்குள் கத்தியோடு ஒருவர் நுழைய முடிந்தது எப்படி?. இந்தச் செயலில் ஈடுபட்டவர் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்க பாஜக முயன்று வருகிறது. இதற்கு மக்கள்ஆதரவளிக்க வேண்டும். பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். பார்வர்ட்பிளாக் கட்சிகள் இதற்கு முன் வந்துள்ளன.

நவம்பர் 11ம் தேதி முதல் ஈரோட்டில் இரு நாட்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்கும் என்றார் கணேசன்.

தமிழகம் பீகாராகிவிட்டது:

இந் நிலையில் மதுரை வந்த பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்திருப்பரங்குன்றத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டில் ராக்கெட் குண்டுகள் தயாரிக்கப்படுகிறது. மணிப்பூர் தீவிரவாதி இங்குசிகிச்சை பெறுகிறார். கேரளாவிலிருந்து தீவிரவாதிகள் இங்கு பகிரங்கமாகநடமாடுகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலின் போது நடந்த வன்முறை வேதனையை தந்தது. தமிழகத்தைசிங்கப்பூராக மாற்றுவோம் என கூறியவர்கள், பீகாராக மாற்றிவிட்டனர்.

அரசியலில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் சகஜம். இரண்டையும் சமமாக பாவிக்கவேண்டும். மக்களுக்கு சாதனைகள் செய்திருந்தால் திமுகவிற்கு மகிழ்ச்சியாகஓட்டளித்திருப்பார்கள். ஆனால், தோல்வி பயம் வந்துவிட்டதால் வன்முறையைகட்டவிழ்த்து விட்டனர்.

இனிமேலாவது திமுக அரசு தனக்குள்ள அச்சத்தை போக்கும் வயிைல் சிறப்பாகசெயல்பட வேண்டும்.

திமுக கூட்டணியிலுள்ள கட்சிகள் முதல் நாள் திமுகவை எதிர்க்கின்றன. மறுநாள்ஒட்டிக்கொள்கின்றன. எந்த பசை மூலம் இவ்வாறு ஒட்டிக்கொள்கின்றன என்று தான்தெரியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+