For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை மாநகராட்சி ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இந்தப் பதவியில் இருந்து வந்த விஜய்குமார், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மாநில திட்டஇயக்குனராக தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

Rajesh Lakshaniஅதிமுக ஆட்சியில் துணை மேயர் கராத்தே தியாகராஜனுடன் கடுமையாக மோதினார் விஜய்குமார். தன்னைஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுத்து தனது பெயரைக் கெடுத்ததே விஜய்குமார் தான் என கராத்தேயும் புலம்பிவந்தார்.

கராத்தே ஊரை விட்டு ஓடி தலைமறைவாக இருந்தபோது மாநகராட்சியின் முழு அதிகாரமும் விஜய்குமார் வசம்வந்தது. இந் நிலையில் ஆட்சி மாறினாலும் கமிஷ்னர் பதவியில் தொடர்ந்தார். இப்போது உள்ளாட்சித் தேர்தல்முடிந்து புதிய மேயர், கவுன்சிலர்கள் தேர்வாகிவிட்ட நிலையில் விஜய்குமார் கல்விப் பணிக்குமாற்றப்பட்டுவிட்டார்.

இவரை தூக்கியடித்ததில் கராத்தேவுக்கும் மிகப் பெரிய பங்குள்ளதாகத் தெரிகிறது. இப்போது மாநகராட்சிகமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் லக்கானி இதுவரை தேனி மாவட்ட கலெக்டராக இருந்து வந்தார்.

கமிஷ்னரான உள்ளாட்சித் துறைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுவார் என்று பேச்சுஇருந்தது. நாகப்பட்டிணம், தஞ்சை மாவட்ட கலெக்டராக இருந்து கும்பகோணம் தீ விபத்து, சுனாமி பேரழிரவுமீட்புப் பணிகளை மிக நன்றாகச் செய்து காட்டி ஒட்டு மொத்த தமிழக மக்களின் அன்பைப் பெற்றவர்ராதாகிருஷ்ணன்.

இவர் திமுகவுக்கு எப்போதுமே ஆகாத முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனின் உறவினர். இதனால் திமுகஆட்சியில் இவர் ஓரங்கப்பட்டலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இவரது திறமை, நேர்மையை மனதில் வைத்துதனது துறையின் செயலாளராக்கிக் கொண்டார் ஸ்டாலின்.

இவரை மாநகராட்சிப் பணிக்கு அனுப்ப ஸ்டாலின் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால் ராஜேஷ்லக்கானி அந்தப் பணிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

தேனி மாவட்ட கலெக்டராக தொழில்துறை கூடுதல் செயலாளர் ஹர்சகாய் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் கலெக்டர் ஆசிஷ் சாட்டர்ஜியும் மாற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்:

அதே போல தமிழகத்தில் மீண்டும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் காலை, மாலை என நேரங்காலம் இல்லாமல் தமிழகம் முழுவதுமே ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.

இடையில் இந்த வேகம் கொஞ்சம் குறைந்தது. இப்போது மீண்டும் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பேர் அதிரடியாகஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தலைமையிட ஐஜியாக இருந்த ராஜா, ரயில்வே ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி போலீஸ் கமிஷ்னராக இருந்த சுனில்குமார் சிங், திருச்சி ஆயுதப் படை டிஐஜியாக டப்பா பதவியில் தூக்கிஅடிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காத்திருப்போர் பட்டியலில் தேவுடு காக்க வைக்கப்பட்டிருந்த சங்கர் ஜிவால், திருச்சியின் புதியகமிஷ்னராக்கப்பட்டுள்ளார்.

அதே போல காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு அபயம் தேடி வந்த கரன் சின்ஹா, கடலோர பாதுகாப்புப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை போக்குவரத்து துணை கமிஷ்னராக இருந்த கல்பனா நாயக், நாகப்பட்டிணம் எஸ்பியாக்கப்பட்டுள்ளார்.நாகப்பட்டிணம் எஸ்பியாக இருந்த தமிழ்ச் சந்திரன், கோவை குற்றப் பிரிவு துணை கமிஷ்னராகியுள்ளார்.

இதுவரை காத்திருப்போர் பட்டியலில் காத்திருந்த ரவீந்திரன், மதுரை துணை கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனிதா உசேன், சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்பியாகவும்,இதுவரை இந்தப் பதவியில் இருந்த முகம்மது ஹனீபா காத்திருப்போர் பட்டியலுக்கும் வந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X