ஜெ வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி கைது
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் கத்தியுடன் நுழைய முயன்றநபர் பிடிபட்டார்.
நேற்று ஒரு நபர் ஜெயலலிதா வீட்டருகே ஒரு நபர் ஸ்கூட்டரில் வந்தார். நேராக ஸ்கூட்டரை ஜெயலலிதாவின்வீட்டு கேட் மீது மோதினார். மோதிய வேகத்தில் கேட் திறந்துவிட்டது.
அப்போது வெளியே காவலுக்கு ஒரு போலீஸ்காரர் மட்டுமே இருந்தார். மோதிய வேகத்தில் ஸ்கூட்டரும் கீழேசாய்ந்துவிட்டது. இதையடுத்து அந்த நபர் ஜெயலலிதாவின் வீட்டு காம்பவுண்டுக்குள் ஓடினார்.
அவரிடம் ஒரு கத்தியும் பெரிய இரும்பு பைப்பும் இருந்தது. வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்த அந்த நபரைஉள்ளே மப்டி உடையில் இருந்த போலீசாரும் காவலாளிகளும் பிடிக்க முனைந்தபோது கத்தியைக் காட்டிமிரட்டியபடி வெளியே ஓடிவந்தார்.
அப்போது அவரை ஒரு போலீஸ்காரர் பிடித்து அமுக்கினார். அவரை அந்த நபர் கத்தியால் குத்திவிட்டுவெளியே ஓடினார்.
வெளியே நின்றிருந்த டயோடா குவாலிஸ் காருக்குள் ஏறிய அந்த நபர் கத்தியைக் காட்டி அதன் ஓட்டுனர் ஜாகீர்என்பவரை மிரட்டி காரை கிளப்பச் சொன்னார். பயந்து போன டிரைவர் காரைக் கிளப்பினார்.
காரை திருநீர்மலையை நோக்கி ஓட்டுமாறு அந்த நபர் மிரட்டினார். ஆனால், மெயின் ரோட்டுக்கு வந்தவுடன்காரை நிறுத்திய டிரைவர் அதற்கு மேல் ஓட்ட முடியாது என மறுத்துவிட்டார்.
இதையடுத்து காரில் இருந்து அந்த நபர் குதித்து இறங்கி ஓடிவிட்டார். ஓடும்போடு சட்டையை கழற்றி வீசினார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் படை போயஸ் கார்டனுக்கு விரைந்தது. அங்கு கிடந்த ஸ்கூட்டரின் பதிவுஎண்ணை வைத்து துப்பு துலக்கிய போலீசார் அந்த நபரை நந்தம்பாக்கம் பகுதியில் வைத்து பிடித்தனர்.
அந்த நபரின் பெயர் கார்த்திக் ஜோசுவா (வயது 48). இவர் டிரைவராக வேலை பார்த்தவர் என்றுதெரியவந்துள்ளது.
அவர் மன உளைச்சலுக்கு உள்ளானவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் குடிபோதையில் தான் போயஸ்கார்டனுக்கு வந்து கலாட்டா செய்துள்ளார்.
2005ம் ஆண்டிலும் இதே போல அவர் போயஸ் கார்டனுக்கு வந்து கலாட்டா செய்து கைதாகியுள்ளார் என்றும்தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications