சொந்த ஊரில் காளிமுத்து உடல் அடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:முன்னாள் சபாநாயகரும், அதிமுக அவைத் தலைவருமான காளிமுத்துவின் உடல்இன்று அவரது சொந்த ஊரான ராமுத்தேவன் பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

Jaya consoles Kalimuthus wife Manohariஅதிமுக அவைத் தலைவரான காளிமுத்து சில மாதங்களுக்கு முன் உடல் நலகுறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கபட்டிருந்தார்.

இந் நிலையில் நோற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காளிமுத்துமருத்துவமனையிலேயே உயிரிழந்தார். நேற்று காலை 9 மணி அளவில் அவரது உடல்மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டை செனடாப் ரோட்டில் உள்ள அவரதுமுதல் மனைவி நிர்மலா வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அண்ணா நகரில் உள்ள காளிமுத்துவின் இரண்டாவது மனைவி மனோகரிவீட்டிற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டது.

பின்னர் காளிமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, எஸ்எஸ்.காலனியில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம்,கவியரசு வைகமுத்து உள்பட ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து வில்லாபுரத்தில் உள்ள காளிமுத்துவின் வீட்டுக்கும் உடல் கொண்டுசெல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிவகாசி அருகே உள்ள காளிமுத்துவின் சொந்த ஊரானராமுத்தேவன் பட்டிக்கு உடல் கொண்டு வரப்பட்டது. காளிமுத்துவின் உடல்வந்தவுடனேயே கிராமமே சோகத்தில் மூழ்கியது. உறவினர்கள் ஏராளமானோர் வந்துகாளிமுத்துவின் உடலைக் கண்டு கதறினர்.

அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காளிமுத்து உடலுக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து காளிமுத்துவின் சொந்த தோட்டத்தில் அவரது பெற்றோரின் சமாதிக்குஅருகிலேயே காளிமுத்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+