ரயிலில் தமிழக அமைச்சரின் சூட்கேஸ் அபேஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் ஏசி கோச்சில் வந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சூட்கேஸ்திருடப்பட்டுவிட்டது.
தமிழக விவசாயத்துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகம் ஏற்காடு எக்ஸ்பிரஸ்ரயில் மூலம் சென்னை வந்தார். "ஏசி கோச்சில் அவர் பயணம் செய்தார்.
தனது சூட்கேசை இருக்கைக்கு மேலே வைத்துவிட்டு உறங்கிவிட்டார். காலை 4.35மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை ரயில் வந்தடைந்தபோது சூட்கேசைகாணவில்லை.
இதை வெளியில் சொன்னால் பரபரப்பாகிவிடும் என்பதால் சென்ட்ரல் ரயில் நிலையரயில்வே போலீசாரிடம் "ரகசியமாக புகார் தந்துவிட்டுச் சென்றார் அமைச்சர்.
அமைச்சரின் சூட்கேஸ் அபேஸ் செய்யப்பட்டதா அல்லது வழியில் இறங்கியபயணிகளிலி யாராவது தவறுதலாக அமைச்சரின் சூட்கேசை எடுத்துச்சென்றுவிட்டார்களா என்று தெரியவில்லை.
இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications