அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:அமெரிக்க தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சிக்கு பெரும் தோல்வி கிடைத்ததையடுத்து பாதுகாப்புஅமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

Donald Rumsfeldஅமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபைக்கும், மகாணஆளுநர் பதவிகளுக்கும் நடந்த தேர்தலில் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சிபெரும் தோல்வியைத் தழுவியுள்ளது.

இதில் பெரும்பாலான பதவிகளையும் ஜனநாயகக் கட்சி வென்றுள்ளது.

இராக் விவகாரத்தை ஜார்ஜ் புஷ் கையாண்ட விதம், அவர் காட்டிய திமிர்த்தனம் ஆகியவையே இந்தபடுதோல்விக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இராக் மீது போர் தொடுக்க புஷ்சுக்கு முழு அளவில் ஆதரவாய்இருந்த டொனால்ட் மீதும் கடும் அதிருப்தி நிலவி வந்தது.

இந் நிலையில் தனது பதவியை ரம்ஸ்பீல்ட் ராஜினாமா செய்துவிட்டார். அவருக்குப் பதிலாக முன்னாள் சிஐஏஇயக்குனர் ராபர்ட் கேட்ஸை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக புஷ் அறிவித்துள்ளார்.

புஷ்சுக்கு ஆஸ்திரேலியா அட்வைஸ்:

தேர்தல் தோல்வியால் இராக் விவகாரத்தில் தனது போக்கை அதிபர் புஷ் மாற்றிக் கொள்ளக் கூடாது எனஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் அட்வைஸ் தந்துள்ளார்.

புஷ் தனது நிலையை மாற்றிக் கொண்டால் அது தீவிரவாதிகளுக்குத் தான் உதவியாக இருக்கும் என ஹோவர்ட்கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+