பவாரிடம் மன்னிப்பு கேட்ட ரிக்கி பாண்டிங்
மும்பை:சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது ஆஸ்திரேலிய அணி நடந்துகொண்ட விதத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், மத்தியஅமைச்சருமான சரத் பவாரிடம், ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்தொலைபேசி மூலம் பேசி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
மும்பையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவின்போது மேடையில்,விதிகளுக்குப் புறம்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஒட்டுமொத்தமாக ஏறிக் கொண்டனர்.அத்தோடு, பரிசுக் கோப்பையுடன் நின்ற சரத் பவாரை அவமதிக்கும் வகையில்,கேப்டன் பாண்டிங் விரலை சொடுக்கி பவாரை கூப்பிட்டு கோப்பையைக்கொடுக்குமாறு திமிராக கூறினார்.
அத்தோடு நில்லாமல், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக பவாரை முதுகைப்பிடித்துத் தள்ளி விட்டு அங்கிருந்து அகற்றினார் ஆஸ்திரேலிய வீரர் மார்ட்டின்.ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த அடாவடிப் போக்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.
இந்திய கிரிக்கெட் பிரபலங்கள், முன்னாள் வீரர்கள் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியவீரர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். இப்பிரச்சினையை பெரிதாக்கவேண்டியதில்லை என்று முதலில் கருத்து தெரிவித்திருந்த பவாரும நேற்றுஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் அநாகரீகமானவர்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பவாருக்கு ஒரு கடிதம் எழுதியது.அதில் நடந்த சம்பவத்திற்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்,இதுதொடர்பாக பாண்டிங் உங்களைத் தொடர்பு கொண்டு பேசுவார் எனவும்தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பாண்டிங் பவாரைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உங்களைப்போன்ற பெரிய மனிதர்களிடம் தவறாக நடந்து கொள்ள வேண்டும் என நான்ஒருபோதும் நினைத்ததில்லை. அன்று சாம்பியன் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில்இருந்தோம். அதனால் எங்களை அறியாமலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.
இச்சம்பவம் உங்களை வேதனைப்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் நானும்,எனது அணியும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களை மன்னித்து விடுங்கள்என்று பாண்டிங் கூறியுள்ளார்.
அதற்கு பவார், நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உங்கள் அணியைமிகவும் மதிப்பவர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்தார்.
ஷேவாக்குக்கு கபில் அறிவுரை:
இதற்கிடையே இந்திய நட்சத்தி வீரர் வீரேந்திர ஷேவாக் தனது பேட்டிங் திறமைகுறித்து மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ்கூறியுள்ளார்.
இந்திய அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது குறித்து கபில் கருத்துதெரிவிக்கையில், நமது அணி ஒட்டுமொத்தமாக பார்த்தால் சிறந்த அணிதான். அதில்சந்தேகம் இல்லை.
ஆனால் அணியின் குறைபாடு என்னவென்றால் பந்து வீச்சுதான். நம்மிடம் நல்ல,திறமையான பந்துவீச்சாளர்கள் இல்லை. இதில் நாம் படு மோசமாக இருக்கிறோம்.
எனவே பந்துவீச்சின் பலவீனத்தை மனதில் கொண்டு பேட்ஸ்மென்கள் அதிக அளவில்ரன்களைக் குவிக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் வெற்றிகளை எளிதில் பெறமுடியும்.
ஷேவாக் கடந்த சில வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.சிறப்பாகவே ஆடுகிறார். எனவே அவரது பேட்டிங் திறமை குறித்து சந்தேகப்படத்தேவையில்லை. இருப்பினும் தனது பேட்டிங் குறித்து அவர் மறு பரிசோதனை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தனது பேட்டிங்கில் உள்ள குறைகள் குறித்து தேவைப்பட்டால் மூத்த வீரர்களிடம்ஆலோசனை பெற அவர் தயங்கக் கூடாது.
கடந்த தென்னாப்பிரிக்க பயணத்தின்போது இந்திய அணி சிறப்பாகவிளையாடவில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் சிறப்பாக ஆடுவார்கள் என்றார்கபில் தேவ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications