இலங்கை: இந்தியா பொறுத்தது போதும்-கருணாநிதி
சென்னை:இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அமைதியாக வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கப் போகிறது. பொறுமையை முடித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களை குறி வைத்து இலங்கை அரசு வெறித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 65 அப்பாவித் தமிழர்கள்பலியாகியுள்ளனர். வீடுகளை இழந்து மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தவர்கள் இவர்கள்.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முதல்வர்கருணாநிதியும் இச்செயலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சில மாதங்களுக்கு முன்புதோன் செஞ்சோலை என்ற இடத்தில், இலங்கை விமானப்படை நடத்திய கொடூரத்தாக்குதலில் அப்பாவித் தமிழ் சிறார்கள் பலியானார்கள். அந்த சம்பவத்தின் கொடுமை அங்குள்ள தமிழர்களின்நினைவிலிருந்து மாறாத நிலையில் அதற்குள் இதோ இன்னொரு மரண ஓலம்.
மட்டக்களப்பு அகதிகள் முகாமில் தங்கியிருந்த அப்பாவித் தமிழர்கள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்திநூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துள்ளனர். விமான தாக்குதல் மட்டுமல்லாமல், ஏவுகணைகளைத்தாக்கியும், பிஞ்சுக் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான தமிழர்களை பிணமாக்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நார்வே சமரசக் குழுவினர் மீதும் கூட இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. நான்மத்திய அரசிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி என்னவென்றால், இன்னும் எத்தனை காலத்திற்குத்தான்இலங்கையில் நடைபெறுவதை நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இந்தியாவின் நிலையை மறு பரிசீலனை செய்யும் நேரம் வந்து விட்டது.இதை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இலங்கை அரசு முதலைக் கண்ணீர்:
இதற்கிடையே மட்டக்களப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரம்புகெவல்லா கூறுகையில், மட்டக்களப்பில் நடந்ததாக்குதலில், அகதிகளாக தங்கியிருந்தவர்கள் பலியானது குறித்து இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கிறது.
ஆனால் அகதிகளை தங்களைக் முகாக்கும் மனிதக் கேடயங்களாக புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை தவிர்க்க முடியாதது. எங்களுக்கு நாட்டின் பாதுகாப்புதான்முக்கியமானது என்றார் ரம்புகவெல்லா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications